கொசுக்களை விரட்ட எவ்விதமான காயில் , லிக்யூடு வேப்ரைசர் போன்றவை இல்லாமல் எல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி சீரிஸ் வாங்கினால் எவ்விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் விரட்டி விடலாம்.

எல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி சீரிஸ் விற்பனைக்கு வந்தது

எல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி சீரிஸ் விலை பட்டியல்

  • 80 cm  LG Mosquito Away TV – ரூ. 26,900
  • 180 cm LG Mosquito Away TV – ரூ. 47,500
எல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி ஆனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மொஸ்கிட்டோ அவே டிவியில் உள்ள அல்ட்ரோசோனிக் கருவியை ஒருமுறை இயக்கிவிட்டால் தொடர்ந்து அல்ட்ராசோனிக் அலைகளை அனுப்பி கொசுக்களை விரட்டி அடிக்கும். இது மிக குறைவான அலையை ஏற்படுத்தும் என்பதனால் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் கதிர்வீச்சுகளும் இல்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயோடெக்னாலஜி மற்றும் டாக்சிகாலஜி (International Institute of Biotechnology and Toxicology -IIBAT ) தரநிர்னையத்தினை பூர்த்தி செய்யும் வகையில் அல்ட்ரோசோனிக் கதிர்வீச்சு இருக்கும். எவ்விதமான கொசுவர்த்தி காயில்கள் , நச்சுதன்மைமிக்க ரிபெலன்ட்ஸ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இதுபற்றி எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகி ஹாவார்ட் லீ கூறுகையில் எல்ஜி நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை ஏற்ற வகையில் பொருட்களை தயாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. புதிய மொஸ்கிட்டோ அவே வீடுகளை மிக சுகாதாரமாக வைத்துக் கொள்ள உதவும் என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது  எல்ஜி பிராண்டு கடைகளில் எல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி சீரிஸ் கிடைக்கும்.

ஆன்லைனில் எல்இடி டிவி வாங்க ; எல்ஜி மொஸ்கிட்டோ அவே டிவி சீரிஸ் விற்பனைக்கு வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here