ரூ. 4,999 ஆரம்ப விலையில் ஏர்டெல் இன்டர்நெட் டிவி செட் டாப் பாக்ஸ் சப்ஸ்கிரைப் பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவி போல செயல்பட ஏர்டெல் செட் டாப் பாக்ஸ் உதவுகின்றது.

ஏர்டெல் இன்டர்நெட் டிவி அறிமுகம்

ஏர்டெல் இன்டர்நெட் டிவி

  • ஏர்டெல் இன்டர்நெட் டிவி சேவையில் நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், கூகுள் பிளே ம்யூசிக் போன்றவை கிடைக்கும்.
  • ரூபாய் 4,999 விலையில் சப்ஸ்கிரைப் பிளான்கள் தொடங்குகின்றது.
  • இந்தியாவின் முதல் ஹைபிரிட் டிடிஎச் செட் டாப் பாக்ஸ் ஆகும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்பையாக கொண்ட இந்தியாவின் முதல் ஹைபிரிட் டிடிஎச் செட்டாப் பாக்ஸாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏர்டெல் இன்டர்நெட் டிவி சேவையில் ப்ரீலோடாக நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், கூகுள் பிளே ம்யூசிக் , ஏர்டெல் மூவிஸ் போன்வறை வழங்கப்பட்டுள்ளது.

க்ரோம்கேஸ்ட் வழியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிடிஎச் பாக்சில் இணைய இணைப்பு வாயிலாக தொலைக்காட்சி சேனல்களை பெறலாம். இந்த ஹைபிரிட் டிடிஎச் பாக்சில்  HDMI, யூஎஸ்பி, எதர்நெட் போன்றவற்றுடன் ப்ளூடூத் மற்றும் வைஃபை வாயிலாக தொலைக்காட்சி சேவைகளை பெறலாம்.

பெருகிவரும் பிராட்பேண்ட் சேவையை கணக்கில் கொண்டு இந்த இணைய தொலைக்காட்சி பாக்சை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.இந்த டிடிஎச் பாக்சிற்கு குறைந்தபட்சம் 4Mbps இணைய வேக சேவையை பெறுவது அவசியமாகும். இந்த சேவையை 4K தரத்தில் பெறுவதுடன் , நிகழ்ச்சிகளை பதிவு செய்வது , நிறுத்தி வைப்பது மற்றும் ரீவைன் செய்து பார்க்க உதவும். இந்த பாக்சில் உள்ளடங்கிய மெம்மரியாக 8ஜிபி வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் இன்டர்நெட் டிவி அறிமுகம்

அமேசான் தளத்தில் இன்று முதல் கிடைக்க உள்ள இந்த டிவி செட்டாப் பாக்ஸ் ஆரம்ப விலை சப்ஸ்கிரைப் மூன்று மாதங்களுக்கு ரூ.4,999 மட்டுமே. மேலும் வருடாந்திர சப்ஸ்கிரைப் பிளானை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூபாய் 7,999 ஆகும். முந்தைய ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,999 ஆகும்.

மைஏர்டெல் ஆப் வழியாக மைஹோம் பகுதியில் டிடிஎச் செட்டாப் பாக்ஸை முன்பதிவு செய்தால் 25 ஜிபி உள்ளடங்கிய மெமரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here