நாசா வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் தொடர்பான வாழ்க்கை ஆதாரங்களை நாசா வெளியிடுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஹேக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏலியன்ஸ் ஆதாரத்தை நாசா வெளியிடும்..! : ஹேக்கர்கள்

ஏலியன்ஸ் ஆதாரம்

வேற்றுகிரக வாசிகள் உள்ளனரா ? என்ற கேள்விக்கு விடை தெரியாத கேள்வியாகவே தொடர்ந்து வரும் நிலையில் நாசா ஏலியன்ஸ் வாழ்க்கை தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவார்கள் என பெயரில்லா நபர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப் தளத்தில் அநாமதேயாக வெளியிடப்பட்டுள்ள ஒரு கனிணி குரல் கொண்ட வீடியோவில் நாசா வேற்றுகிரக வாசிகள் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளதாக உறுதியாக அந்த வீடியோ குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏலியன்ஸ் ஆதாரத்தை நாசா வெளியிடும்..! : ஹேக்கர்கள்

இந்த வீடியோ குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கியமான தகவல் என்னவென்றால் ” நமது சமுதாயம் ஏலியன்ஸ் தொடர்பான வாழ்க்கை ஆதாரங்களை விரைவில் பிரபஞ்சத்திலிருந்து அறியும் விளிம்பில் உள்ளதாக நாசா பேராசிரியர் தாமஸ் ஜூர்பூகான் தனது நண்பர் ஒருவரிடம் சொன்னதாக இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் சமீபத்தில் நாசா பேராசிரியர் தாமஸ் ஜூர்பூகான் தனது ட்விட்டரில் 2339 கோள்கள் உள்ளதாக கண்டறியப்பட்டதில் 229 பூமியை போன்று உயிர் வாழ தகுதியுடைய கோள்கள் உள்ள தகவல், டிராப்பிஸ்ட் 1 எனப்படும் பூமியை போன்ற அமைப்பு கொண்ட கோள்கள் என பலவற்றை நாசா வெளியிட்டிருக்கும், நிலையில் இந்த வீடியோ ஏலியன்ஸ் உள்ளார்கள் என்பதனை மீண்டும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதால் உண்மையை வெளியிடுமா ? நாசா  என்ற எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்துள்ளது.

https://www.youtube.com/watch?v=HGh8n1XxDrg