வங்கி துறையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களில் ஒன்றான பேமெண்ட் சார்ந்த வங்கி சேவை வழங்குவதற்கான இறுதி கட்ட அனுமதியை ஐடியா நிறுவனம் விரைவில் பெற உள்ளது.

பேமெண்ட் வங்கி

  • ஏர்டெல் பேமெண்ட் வங்கி நிறுவனம் 7.25 சதவித சேமிப்பை பெற்று முன்னணி வகிக்கின்றது.
  • இந்த வங்கிகளில் பணத்தை சேமிக்கும் வகையிலான அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
  • பேமெண்ட் வங்கிகள் கடன் தருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

மத்திய ரிசர்வ வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகின்ற 11 பேமெண்ட் வங்கிகள் இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), பேடிஎம் ரிலையன்ஸ், ஏர்டெல், வோடஃபோன், டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் போன்ற நிறுவனங்களும் அனுமதி பெற்றுள்ளது.

20 கோடிக்கு மேற்பட்ட தொலை தொடர்பு சந்தாதாரர்களை பெற்று விளங்குகின்ற ஐடியா நிறுவனம் பேமென்ட் வங்கி சேவையை எளிதாக கொண்டு செல்ல உதவும் என நம்புகின்றது. ஆதித்யா பிர்லா ஐடியா பேமெண்ட் வங்கி என்ற பெயரில் வழங்கப்பட உள்ள இந்த சேவையில் 20 லட்சம் ஐடியா ரீசார்ஜ் மையங்களை பேமென்ட் சார்ந்த சேவைகளுக்கு மையமாக பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றது.

பேமென்ட் வங்கி சேவையில் ஏர்டெல் நிறுவனம் அபரிதமான வளர்ச்சியை பதிவு செய்ய தொடங்கியுள்ளது.