ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரபலமான மாடல்களில் ஒன்றான ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போனை சந்தையிலிருந்து நீக்குவதாக ஒன்ப்ளஸ் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 3T நீக்கம்

சில வாரங்களுக்கு முன் ஒன்பிளஸ் 3டி நீக்கப்படலாம் என வெளிவந்த செய்தியை மறுத்த ஒன்பிளஸ் நிறுவனம் தற்பொழுது தனது அதிகார்வப்பூர்வ ஃபோரம் பக்கத்தில் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் அதாவது கையிருப்பு உள்ளவரை மட்டுமே கிடைக்கும் என அறிவித்துள்ளது.

ஆனால் 3T ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான மேம்பாடுகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் 3டி மாடல் தற்போது oneplusstore.in, Amazon.in மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஹோம் வழியாக மட்டுமே  64GB மற்றும் 128GB என இருவிதமான வகைகளில் ரூ. 29,999 விலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அடுத்த சில வாரங்களில் புதிய ஃபிளாக் ஷிப் கில்லராக ஒன்ப்ளஸ்5 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி உடன் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்ற முதல் மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற ஜூன் மாத மத்தியில் புதிய ஒன்ப்ளஸ்5 விற்பனைக்கு வெளியிடப்படலாம்.