இன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் உள்ள குறைகள் மற்றும் நிறைகள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா

இந்த வருடத்தின் ஸ்மார்ட்போன் வரவுகளில் ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக வலம் வர தொடங்கியுள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை தாண்டி வாங்கலாமா ? வேண்டாமா ? என ஆராய்ந்து பார்க்கலாம் வாங்க..!

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை

ஒன்பிளஸ் 5 வாங்கலாம் ஏன் ?

பிராசஸர்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் முன்னணியான பிராசஸர் வழங்கும் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 835 எனப்படும் திறன் மிகுந்த பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய பிராசஸரை பெற்றுள்ளது. இந்த பிராசஸர் உயர்ரகமான குறிப்பிட்ட சில மொபைல்களில் மட்டுமே கிடைக்கின்றது.

ரேம்

வேகமான செயல்பாட்டை வழங்கும் வகையில் முக்கிய பங்காற்றுகின்ற ரேம் விசயத்தில் ஒன் பிளஸ் மிகுந்த கவனமாக 8ஜிபி மற்றும் 6ஜிபி என உயர்ரக ரேம்களை வழங்கியுள்ளதால் ஹெவியான கேம்கள் மற்றும் ஆப்களை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது.

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை

டூயல் கேமரா

பின்புறத்தில் ஒன்பிளஸ் முதன்மையாக இரட்டை கேமரா ஆப்ஷனை வழங்கியுள்ளது. இதில் குறிப்பிடதக்க அம்சமாக ஆப்டிக்கல் ஜூமிங் உள்பட 16 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் என இரு கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்திலான ஆக்சிஜன் ஓஎஸ் எனும் சொந்த ஓஎஸ் வாயிலாக பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக பயனாளர் இடைமுகம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை

ஒன்பிளஸ் 5 வாங்க வேண்டாம் ஏன் ?

காப்பி & பேஸ்ட் டிசைன்

என்னதான் அசத்தலான மொபைலாக காட்சி அளித்தாலும் இதன் முதல்படம் இணையத்தில் வைரலானது முதல் வெளிவந்த வரை ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஓப்போ R11 ஸ்மார்ட்போன் காப்பி என சொல்லப்பட்டு வந்த நிலையில் அது உறுதியாகிவிட்டது.

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை

டிஸ்பிளே

முந்தைய ஒன்பிளஸ் 3டி மொபைல் திரை அளவான 5.5 அங்குல டிஸ்பிளே மற்றும் 1920×1080 பிக்சல் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது மட்டுமல்ல 401ppi பிக்சல் அடர்த்தி முதல் அதே டிஸ்பிளே எந்த மாற்றங்களும் இல்லாமல் பொருத்தப்பட்டுள்ளதாக மொபைல் ஆர்வலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வாட்டர் ரெஸ்டென்ட் இல்லை

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலே நீர்புகா மற்றும் தூசு பாதுகாப்பு போன்றவற்றுக்கான IP ரேட்டிங் பெற்ற மொபைல்கள் வர தொடங்கி உள்ள நிலையில் நீர்புகா அமைப்பு ரூபாய் 38,000 விலை உள்ள ஸ்மார்ட்போனில் இல்லை என்பதே மிகப்பெரிய குறையாகும்.

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை

பேட்டரி

முந்தைய ஒன்பிளஸ்3T மாடலை விட கூடுதலான பேட்டரி பெறா விட்டாலும் அதற்கு ஈனையான பேட்டரியை வழங்கியிருக்கலாம் ஆனால் அதனை விட 100mAh திறன் குறைந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ்5 பேட்டரி 3300mAh மட்டுமே ஆகும்.

ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை

 செல்ஃபீ கேமரா

முந்தைய ஒன்பிளஸ் 3டி முன்பக்க கேமராவசதிகளில் எந்த கூடுதல் மாற்றங்களும் செய்யப்படாமல் சோனி IMX371 சென்சார் ,f2.0 அப்ரேச்சர் பெற்ற அதே கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பீடு அட்டவனை கீழே வழங்கப்பட்டுள்ளது…!

நுட்பங்கள் ஒன்பிளஸ் 5 ஒன்பிளஸ் 3T
டிஸ்பிளே 5.5 இஞ்ச், 1920x1080p Full HD  5.5 இஞ்ச், 1920x1080p Full HD
ஓஎஸ்  ஆண்ட்ராய்டு 7.0   ஆண்ட்ராய்டு 7.0
பிராசஸர்  2.45GHz ஸ்னாப்டிராகன் 835Soc 2.35GHz ஸ்னாப்டிராகன் 821Soc
ரேம்  6GB/8GB  6GB
கேமரா 16MP+20MP -ரியர் , 16MP- முன் 16MP-ரியர் , 16MP- முன்
பேட்டரி  3300mAh  3400mAh
சேமிப்பு  64GB/128GB   64GB/128GB
ஆதரவு  4G, LTE, 3G, Wi-Fi, Bluetooth, USB Type C, NFC and GPS  4G, LTE, 3G, Wi-Fi, Bluetooth, USB Type C, NFC and GPS

 

இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் 5 மொபைல் விலை ரூ. 32,999 மற்றும் 37,999 எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விபரங்களுக்கு இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் இணையதளத்துடன்..!

இருவிதமான அம்சங்களை ஒப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் உங்கள் பார்வை என்ன ? வாங்கலாமா .. வேண்டாமா…! உங்கள் கருத்து என்ன ?

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here