ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக் ஷீப் மொபைலான ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் 5 விபரம்

  • ஒன்ப்ளஸ் 5 மொபைல்போனில் 6ஜிபி ரேம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மொபைலில் 128GB உள்ளடங்கிய மெமரி இடம்பெற்றிருக்கும்.
  • முந்தைய ஒன்பிளஸ் 3 சார்ஜிங் திறனை விட கூடுதல் வேகம் கொண்ட நுட்பம் பெற்ற டேஸ் சார்ஜ் நுட்பத்தை பெற்றதாக விளங்கும்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சிஇஓ சமீபத்தில் வெளியிட்டிருந்த தகவலின் அடிப்படையில் புதிய ஒன்பிளஸ் வருகை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் பல்வேறு விதமான யூகத்தின் அடிப்படையிலான தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் ஆப்ஷனில் 128GB மெமரி வசதியுடனும் ,  8ஜிபி ரேம் ஆப்ஷனில் 256GB மெமரி வசதியும் பெற்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருப்பதுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 Soc பெற்றிருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

கேமரா பிரிவின் பின்புறத்தில் இரட்டை கேமரா வசதி கொடுக்கப்பட்டு இரண்டு 12MP கேமரா வழங்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ காலிங் போன்றவற்றுக்கு 8MP கேமரா கொடுக்கப்பட்டிருக்கும்.

இதுதவிர ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மிக வேகமாக சார்ஜ் ஏறும் தொழில்நுட்பமான டேஸ் சார்ஜ் 2.0 , 4ஜி எல்டிஇ, இரு சிம் கார்டு வசதி , 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்ட நாள் முழுமைக்கான 3,600 mAh பேட்டரி பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒன்பிளஸ் 5 மொபைல் விலை ரூ.30,000 ஆக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

சமீபத்தில் ஒப்போ மார்ட் என்ற ஆன்லைன் விற்பனை தளத்தில் $449 என விலை குறிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இது நம்பதகுந்த தகவலாக இல்லை என்பதே உண்மை.

ஒன்பிளஸ்4 வராது ஏன் ?

எந்த சீனாவை சேர்ந்த நிறுவனம் 4 என்ற என்னை பயன்படுத்தவது இல்லை, ஏன் என்றால் சீனாவில் 4 என்ற எண் மரணத்தை குறிக்கும் என நம்புகிறார்கள்.