இந்தியாவில் பயன்பாடில் உள்ள ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மற்றும் முந்தை ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் காட்லெஸ் எனப்படும் மால்வேர் மிக வேகமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களில் மால்வேரை புகுத்துகின்றது என டிரென்ட் மைக்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான டிரென்ட் மைக்ரோ கண்டுபிடித்துள்ள புதிய ஆய்வுகளின்படி 46.19 சதவீத இந்திய மொபைல்களில் காட்லெஸ் ஆண்ட்ராய்டு மால்வேர் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.

காட்லெஸ் மால்வேர் நேரடியாக உங்களுடைய மொபைலுக்கு கூகுள் பிளே மற்றும் அமேசான் ஆப்ஸ்  மேலும் அதிகார்வப்பூர்வமற்ற இணையதளங்கள் வாயிலாக நீங்கள் தரவிறக்கும் ஆப்ஸ் வழியாக ஊடுருவி உங்கள் மொபைலை ரூட்டிங் செய்து உங்களுக்கு தெரியாமல் தேவையற்ற முறையில்  பல அப்ளிகேஷன்களை தரவிறக்கவிட்டு மறைந்து விடும் வகையில் செயல்படுவதாக டிரென்ட் மைக்ரோ செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகயளவில் 8,50,000 லட்சம் ஸ்மார்ட்போன் பாதிப்படைந்துள்ளது. இவற்றில் 46.19 சதவீத இந்திய மொபைல்களும் , இந்தோனேசியாவில் 10.27 சதவீத மொபைல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலில் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்ள ஆண்டிவைரஸ் போன்றவற்றை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். இதனை தவிர்க்க தேவையற்ற ஆப்ஸ்களை தரவிறக்கவோ அல்லது முழுமையான தகவல்கள் இல்லாத ஆப்ஸ்கள் தரவிறக்கம் செய்வதனை தவிர்க்கவும்.

உங்கள் மொபைல் பாதிப்பில் உள்ளதா என்பதனை அறிய தரமான மொபைல் ஆன்டிவைரஸ் தரவிறக்கம் செய்து மொபைலை சோதனை செய்யுங்கள்…

இதுபற்றி உங்கள் கருத்து என்ன மறக்காமல் பதிவு பன்னுங்க..மற்றவர்களுக்கும் உதவும்…