உலகின் மிக விலை குறைந்த ஸ்மார்ட்போன் என விளம்பரம் செய்யப்பட்ட ஃபீரீடம் 251 தயாரிப்பாளரான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் கோயல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது பெயில் வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஃபிரீடம் 251 சுவாரஸ்யங்கள் - சிறப்புதொகுப்பு

ஃபிரீடம் 251

ரூ. 251 விலையில் ஸ்மார்ட்போன் என உலகை திரும்பி பார்க்க வைத்த  நொய்டா-வை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவன தலைவர்  மோஹித் கோயல் ரூ. 16 லட்சம்  வரை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஃபீரிடம் 251 டிரென்டாகி வருகின்றது.

காணாமல் போன ஃபிரீடம் 251 சுவாரஸ்யங்கள் - சிறப்புதொகுப்பு

டைம்லைன் தகவல்கள்

 • இந்தியர்களின் மனநிலையை பிப்ரவரி 15 ,2016யில் புரட்டி போட வைக்கும் நிகழ்வாக ரூ. 251 விலையில் ஸ்மார்ட்போன் என அறிவிக்கப்பட்டது.
 • பதிவு செய்த பின்னர் ஜூலை 30 , 2016க்குள் டெலிவரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 • பிப்ரவரி 20ந் தேதி ஆன்லைன் இணையதளம் freedom251.com வாயிலாக முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலே முடங்கிபோனது.
 • அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முயற்சி செய்த காரணத்தால் இணையதளம் முடங்கி விடத்தாக ரிங்கிங்பெல்ஸ் அறிவிப்பினை வெளியிட்டது.
 • சுமார் 7 கோடி நபர்ங்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.
 • போலி மொபைல் மீடியா விமர்சனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கருவிகளில் ஆட்காம் நிறுவனத்தின்  Ikon 4 மொபைல் அனுப்பி வைத்த முதல் பரபரப்பை அரங்கேற்றியது.
 • 5,000,000 மொபைல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவித்தது.
 • அதில் 2,500,000 கோடி மொபைல்கள் ஆன்லைனில் மீதி மொபைல்கள் கடைகளில் விற்பனை செய்யப்பும் என அறிவித்தது.
 • மேக் இன் இந்தியா திட்டத்தின் டிஜிட்டரல் இந்தியா வாயிலாக ரூ.50,000 கோடி நிதி உதவி கோரியது.

ஃபிரீடம் 9900 டிவி

 • அடுத்த அதிரடி ஹெச்டி எல்இடி டிவி
 • 31.5 அங்குல ஹெச்டி திரை கொண்ட எல்இடி டிவி ரூ.9,900 விலையில் அறிமுகம் செய்தது.
 • 70,000 டிவிகள் விற்பனை செய்யப்படதாக தகவல் தெரிவித்துள்ளது.

காணாமல் போன ஃபிரீடம் 251 சுவாரஸ்யங்கள் - சிறப்புதொகுப்பு

தொடர்ந்து பல்வேறு பரபரப்புகளை கிளப்பி வந்த ரிங்கிங் பெல்ஸ் கடந்த சில மாதங்களாகவே காணமால் போன நிலையில் தற்பொழுது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோஹித் கோயல்

காசியாபாத் நகரை சேர்ந்த அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் ஃப்ரீடம் 251 போன்களை விநியோகம் செய்ய கோயல் மற்றும் ரிங்கிங் பெல்ஸ் சார்பில் சிலரால் 2015 நவம்பரில் வற்புறுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு பலகட்டங்களாக ரூ.30 லட்சம் வரை வழங்கியுள்ளோம். ஆனால் அந்நிறுவனம் சார்பில் ரூ.13 லட்சம் மதிப்புடைய பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது’,  மேலும் மீதமுள்ள 16 லட்சம் ரூபாயை கேட்கும் போது கொலை செய்வதாக பலமுறை தொடர்ந்து மிரட்டியதாக அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவன தலைவர்கள் கூறியுள்ளனர்.
எனவே இந்த புகாரின் காரணமாகவே மோஹித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.
updated :-
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது பெயில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்  இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்பட அனைத்தையும் கோயல் மூடிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here