சமூக வலைதளமான டிவிட்டரில் நமது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு எமொஜி #RepublicDay என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தும் பொழுது தானாகவே தோன்றும்.

சிறப்பு எமோஜி

இதுகுறித்து டிவிட்டர் பொதுக் கொள்கை மற்றும் அரசு பிரிவுத் தலைவர் மஹிமா கவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடியரசு தினத்தை கொண்டாட உள்ள இந்திய மக்களுக்கு, அது தொடர்பான உரையாடல்களை டிவிட்டரில் மேற்கொள்ளும் போது பயன்படுத்த புதிய குடியரசுதின சிறப்பு எமோஜியை வழங்குவதில் டிவிட்டர் பெருமை கொள்கின்றது என தெரிவித்துள்ளார்.

#RepublicDay or #HappyRepublicDay or #RepublicDay2017 போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தும் பொழுது எமோஜி தோன்றும் இது ஜனவரி 27 வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்