குவால்காம் நிறுவனம் புதிதாக இரண்டு நடுதர ரக மொபைலுக்கு ஏற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 660, மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 என இரு பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 , 630 பிராசஸர் அறிமுகம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660,630

இரு பிராசஸர்களும் முந்தைய ஸ்னாப்டிராகன் 653க்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ஸ்னாப்டிராகன் 625 க்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 630 என இரண்டும் சிங்கப்பூரில் நடைபெற்ற க்வால்காம் நிறுவனத்தின் டெக் டே அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய பிராசஸர்களை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை பெற்றதாக வரவுள்ள இந்த இரு சிப்செட்களும் நடுத்தர ரக ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்றதாக வந்துள்ளது. இரண்டுமே மிக சிறப்பான கேமிங் மற்றும் புகைப்படங்களை செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையிலும், எல்டிஇ நெட்வொர்க்கில் மிகுந்த தரவிறக்க வேகத்தை பெறவும், வேகமான பேட்டரி சார்ஜ் உள்பட சிறப்பான பேட்டரி செயல்திறனை கொண்டதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பிராசஸர்களும் X12 LTE நெட்வொர்க் சேவையில் அதிகபட்சமாக நொடிக்கு 600 எம்பி தரவிறக்கம செய்யவும் , அதிகபட்சமாக நொடிக்கு 150 எம்பி வேகத்தில் பதிவேற்றும் செய்வதுடன், புளூடூத் வெர்ஷன் 5.0 மற்றும் குவால்காம் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக விளங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660, மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 என இரண்டிலும் அதிகபட்சமாக 8GB ரேம் வரை பயனபடுத்தவதுடன் யூஎஸ்பி டைப் சி பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 , 630 பிராசஸர் அறிமுகம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660

இதுதான் முதல் ஸ்போர்ட்ஸ் கிரோ பிராசஸராகும். ஸ்னாப்ட்ராகன் 660 சிப்பில் cpu எட்டு கிரோ (Kyro) 260 கோர்கள் பயன்படுத்தப்பட்டு, 4 கிளாக் 2.2GHz மற்றும் 4 கிளாக்டு 1.8GHz பயன்படுத்தப்பட்டுள்ளது. அட்ரெனோ 512 GPU (Vulkan API) பயன்படுத்துவதனால் சிறப்பான கிராபிக்ஸ் கையாளும் திறனை கொண்டதாக விளங்கும்.

புகைப்படத்தில் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிப்பில் ஸ்பெக்டர்160 ISP உடன் இணைந்த EIS 3.0 பெற்றுள்ளதால் இரட்டை கேமரா இயக்கும் திறனுடன் ஜூம் செய்து படங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 , 630 பிராசஸர் அறிமுகம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 630

ஸ்னாப்ட்ராகன் 630 சிப்பில் cpu எட்டு கார்டெக்ஸ் A53 கோர்கள் பயன்படுத்தப்பட்டு, 4 கிளாக் 2.2GHz மற்றும் 4 கிளாக்டு 1.8GHz பயன்படுத்தப்பட்டுள்ளது. அட்ரெனோ 508 GPU (Vulkan API) பயன்படுத்தப்பட்டுளது..

ஸ்னாப்டிராகன் 660க்கு இணையாகவே 630 யிலும் புகைப்படத்தில் சிறப்பான தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிப்பில் ஸ்பெக்டர்160 ISP உடன் இணைந்த EIS 3.0 பெற்றுள்ளது.

வருகை

நடப்பு காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் பெற்ற மொபைல்கள் விற்பனைக்கு வரலாம்.அடுத்த காலண்டில் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் பெற்ற ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும்,என குவால்காம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here