கூகுள் தேடுதல் இயந்திரம் நாம் என்ன தேடுகின்றோமோ அதனை மிக துல்லியமாக தனது அதிநவீன நுட்பத்தினால் வெளிப்படுத்தி வரும் நிலையில் கூகுளுக்கே குழப்பத்தை இந்தியர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

 

கூகுள் செர்ச் எஞ்சின்

கூகுள் தேடுதலில் உள்ள படங்களை தேடும் பகுதியில் South Indian masala என்று கூகுளில் டைப் செய்தால் முழுக்க நடிகைகளின் படங்களள் வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுவே , North Indian masala என்று டைப் செய்தால் சமையல் குறிப்பு படங்கள் பல்வேறு மசாலா பொருட்களை பெற்ற படங்களை காண்பிக்கிறது.

ஏன் ? இந்த குளறுபடி என்றால் நம் இணையதள சேட்டைகள் தான் காரணம், பொதுவாக நடிகைகள் படத்தை தங்களது இணையதளத்தில் தரவேற்றும் முன்னணி தென்னக இணையதளங்களும் சரி, வலைப்பதிவர்களும் அந்த படத்தில் masala என்ற பெயரை இணைத்து விடுகின்றனர். அவ்வாறு அவர்கள் இணைப்பது மட்டுமல்லாமல் தேடும் பிரியர்களும் இந்த Hot masala என்ற வார்த்தையை விடுவதில்லை, எனவே தான் கூகுள் தேடுபொறி பயனாளர்கள் அதிகம் பார்வையிடுகின்ற படங்களை முதலில் நடிகைகளை மசாலா என காட்டி வருகின்றது.

இது குறித்து சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் கொளுத்தி போட்டு வருகின்றனர். ஆனால் இது உண்மையில் கூகுள் தவறா என்றால் இல்லை நமது தென்னக மக்களின் தேடுதல் பழக்கமும் , இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவர்கள் பதிவேற்றும் முறையே காரணமாகும். இதனை விரைவில் கூகுள் சரி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழில் அம்மா என்று தேடினால் கூகுள் ஆபாச தளங்களை ஒரு காலத்தில் வரிசைப்படுத்தியது பலருக்கும் நினைவிருக்கலாம் என நினைக்கிறேன்..!