கூகுள் நிறுவனத்தின் அடுத்த இயங்குதளமாக களமிறங்க உள்ள கூகுள் ஃப்யூசியா ஓஎஸ் (Google fuchsia) நவீன மொபைல்கள் மற்றும் நவீன கணினிகளுக்கு ஏற்ற இயங்குதளமாக வடிவமைக்கப்பட உள்ள திறந்தவெளி மென்பொருளாகும்.

ஆண்ட்ராய்டு இனி மெல்ல சாகும் : கூகுள் ஃப்யூசியா ஓஎஸ்

கூகுள் ஃப்யூசியா ஓஎஸ்

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மற்றும் க்ரோம் ஓஎஸ் போன்றவை லினக்ஸ் இயக்கத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ள நிலையில் கூகுள் உருவாக்கி வரும் புதிய ஃப்யூசியா இயங்குதளம் மைக்ரோகெர்னலை அடிப்படையாக கொண்ட மெகன்டா (meganta) எனப்படும் இயக்கத்தின் அடிப்படையில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2016ல் முதன்முறையாக ஃப்யூசியா இயங்குதளத்தை கூகிள் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இந்த இயங்குதளத்திற்கான புதிய யூஏ எனப்படும் பயனர்களுக்கான இடைமுகத்தை அர்மாடில்லோ யூஐ (armadillo ui) என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு இனி மெல்ல சாகும் : கூகுள் ஃப்யூசியா ஓஎஸ்

ஃப்யூசியா இயங்குதளம் நவீன மொபைல்கள் மற்றும் நவீன கணினிகளை  ரேம் அல்லாத மிக வேகமாக இயங்கும் வகையிலான பிராசஸர்கள் கொண்டு இயக்கப்பட உள்ளது.

அர்மாடில்லோ யூஐ

சமீபத்தில் arstechnica என்ற தளத்தில் வெளியாகியுள்ள கூகுளின் புதிய இயங்குதளத்தின் பயனர் இடைமுகம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை விட முற்றிலும் மாறுபட்ட அமைப்பினை கொண்டு விளங்குகின்றது.

குறிப்பாக மின்னஞ்சல் அனுப்பும் பயனர் முகம் உள்பட வால்யூம் குறைக்க அதிகரிக்கும், பவர் பட்டன் , மொபைல் பிரைட்னஸ், பேட்டரி அமைப்பு போன்றவற்றுடன் கூகுள் நவ் என பலவற்றை கொண்டுள்ளது. இதன் யூஐ விபரத்தை வீடியோவில் காணலாம்.

வீடியோ இனைப்பு முகவரி –>https://youtu.be/_7rRK4S9uk0

இந்த புதிய இயங்குதளம் ஸ்மார்ட்போன்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் ஆண்ட்ராய்டு மொபைல்களை விட மிக சிறப்பான செயல்திறன், வேகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்பதனால் அடுத்த சில வருடங்களில் ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக கூகுள் ஃப்யூசியா ஓஎஸ் நிலை நிறுத்தப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here