இணைய உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் கூகுள் அசிஸ்டென்ட் சேவை பரவலாக விரிவுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கூகுள் அசிஸ்டென்ட் என்றால் என்ன ? எவ்வாறு இயங்குகின்றது என்பதனை காணலாம்.

கூகுள் அசிஸ்டென்ட் என்றால் என்ன ? எவ்வாறு இயங்குகின்றது

கூகுள் அசிஸ்டென்ட் என்றால் என்ன ?

செயற்க்கை நுன்னறிவு கொண்ட இந்த செயலி நீங்கள் தேட நினைப்பதனை கூறினாலே தன்னாலே உங்களுக்கு தேவையான தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பதுடன் அழைப்புகள் ஏற்படுத்துவது முதல் அனைத்து விதமான செயல்பாட்டையும் செய்யுக்கூடிய திறன் கொண்டதாக அசிஸ்டென்ட்  விளங்குகின்றது.

உங்கள் பனியாள் என்ன செய்யும் ?

உங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற வேண்டுமெனில் மிக எளிமையாக கேட்கலாம். நீங்கள் இப்பொழுது அருகாமையில் உள்ள நல்ல உணவகத்தை தேட வேண்டுமெனில் அது தொடர்பான கேள்விகளை பதிவுசெய்யும் பொழுது உங்களுக்கு அருகாமையில் உள்ள உனவகங்களின் தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும்.

உங்கள் கான்டேக்ட் பட்டியலில் உள்ள நபருக்கு அழைக்க வேண்டுமெனில் அந்த நபரின் பெயரை சொல்லி அழைப்பு விடுக்க சொன்னால் அவருக்கான அழைப்பு தொடுக்கப்படும்.

மேலும் நேவிகேஷன் , நினைவுப்படுத்துதல் , பாடல்களை கேட்க , மெசெஜ்களுக்கு ரிப்ளை மற்றும் அனுப்ப போன்ற உதவிகளை வாய்வழி உத்திரவினால் மேற்க்கொள்ளும்.

கூகுள் அசிஸ்டென்ட் என்றால் என்ன ? எவ்வாறு இயங்குகின்றது

கூகுள் அசிஸ்டென்ட்  செட்அப்

ஆண்ட்ராய்டு நெகட் 7.0 மற்றும் ஆண்டார்யாடு 6.0 மார்ஷ்மெல்லா தளத்தில் மட்டுமே செயல்பட உள்ள இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை புதிய மேம்பாடுக்கு அப்டேட் செய்யும் பொழுது பெற்று கொள்ளலாம்.

முதன்முறையாக கூகுள் பிக்சல் போன்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி தற்பொழுது புதிய எல்ஜி ஜி6 மொபைலில் வந்துள்ளது. தற்பொழுது குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த வசதி அடுத்த சில மாதங்களில் பல நாடுகளுக்கும் , பலதரபட்ட ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் வரவுள்ளது.

ஆப்பிள் சிரி மற்றும் அமேசான் அலெக்ஸா போன்றவைகளும் இதே போன்ற சேவையே வழங்கி வருகின்றன.