கூகுள் தேஜ் பேமெண்ட் ஆப் நாளை அறிமுகம் - அருன் ஜேட்லிபணம் மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு டிஜிட்டல் சார்ந்த பண பரிமாற்றத்தை அதிகரிக்க டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை பேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யூபிஐ அடிப்படையில் கூகுள் தேஜ் என்ற பேமெண்ட் செயலியை மத்திய நிதியமைச்சர் அருன் ஜேட்லி  நாளை அறிமுகம் செய்ய உள்ளார்.

கூகுள் தேஜ்

கூகுள் தேஜ் பேமெண்ட் ஆப் நாளை அறிமுகம் - அருன் ஜேட்லி

இந்தியாவில் பேமெண்ட் சார்ந்த தேவைகளுக்கு நேசனல் பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிமுகப்படுத்திய யூபிஐ செயலியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கூகிள் தேஜ் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு நாளை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

தேடுதல் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கூகுள் ஆண்ட்ராய்டு பே என்ற செயலியை சர்வதேச அளவில் செயல்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் வளர்ந்து வருகின்ற டிஜிட்டல் சார்ந்த தேவைகளுக்கான பண பரிமாற்றத்தில் பங்கு பெறும் வகையில் யூபிஐ அடிப்படையில் தேஜ் (TEz) என்ற பேமெண்ட சார்ந்த செயலியை வெளியிட உள்ளது.

இது மற்ற பேமெண்ட செயிலிகளை விட மிக வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.

கூகுள் தேஜ் பேமெண்ட் ஆப் நாளை அறிமுகம் - அருன் ஜேட்லி

நாளை டெல்லியில் நடைபெறுகின்ற விழாவில் மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அறிமுகம் செய்ய உள்ளார். இதுபோன்ற சேவையை ஹைக் மற்றும் வீசாட் ஆகிய செயலிகள் அறிமுகம் செய்துள்ள நிலையில் வாட்ஸ்அப் இதற்கான சோதனை ஓட்டத்தை நிகழ்த்தி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here