கூகுள் நிறுவனத்தின் Google I/O 2017 உருவாக்குநர் மாநாடு கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு ஆண்டராய்டு கோ இயங்குதளத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

Google I/O 2017 : இந்தியாவிற்கு ஆண்டராய்டு கோ அறிமுகம்

 

ஆண்டராய்டு கோ

வருகின்ற 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரவுள்ள ஆண்டராய்டு கோ எனப்படும் புதிய இயங்குதளம் குறைவான மெமரி கொண்ட தொடக்கநிலை ஸ்மார்ட்போன் மாடல்களில் சிறப்பான வகையில் பல்வேறு ஆப்களை பயன்படுத்தலாம்.

Google I/O 2017 : இந்தியாவிற்கு ஆண்டராய்டு கோ அறிமுகம்

1GB ரேம் அல்லது அதற்கு குறைவான திறன் கொண்ட ரேம் பெற்ற மொபைல்களில் செயல்படும் வகையிலான இந்த இயங்குதளத்தில் யூடியூப் கோ உள்பட இலகு எடை பெற்ற க்ரோம், ஜிபோர்டு போன்றவற்றுடன் குறைந்த மெமரி கொண்ட லைட்வெயிட் ஆப்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பிளே ஸ்டோரை கூகுள் வழங்க உள்ளது.

இந்த இயங்குதளத்தில் மற்றொரு சிறப்பு வசதியாக புதிய இயங்குதளங்குள்ளு இணையான பயணர் இடைமுகம் பெற்றிருந்தாலும் அடிப்படையாக வரவுள்ள க்ரோம் பிரவுசர் மிக குறைவான டேட்டாவை பெற வழி வகுக்கும். இந்த இயங்குதளம் மிக குறைந்த டேட்டா பயன்பாட்டை மட்டுமே பெற்று இயங்கும் வகையில் செயல்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

Google I/O 2017 : இந்தியாவிற்கு ஆண்டராய்டு கோ அறிமுகம்

512MB முதல் 1GB ரேம் வரையிலான தொடக்க நிலை ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற இயங்குதளமாக வரவுள்ள ஆண்ட்ராய்டு கோ தளம் இந்தியா, பிரேசில் உள்பட குறைந்த டேட்டா வேகம் கொண்ட வளரும் நாடுகளில் 2018 முதல் விற்பனைக்கு வரவுள்ள கருவிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மாதந்தோறும் 200 கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது. கூகுள் ஐ/ஓ 2017 அரங்கில் புதிய ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளம் உள்பட கூகுள் லென்ஸ், ஐபோன் மொபைலுக்கு கூகுள் ஆசிஸ்டன்ஸ்,ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோவில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here