வரவுள்ள புதிய கூகுள் நெக்சஸ் மார்லின் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு நெளகாட் இயங்குதளத்தில் செயல்படும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கூகுள் நெக்சஸ் சார்பாக இரு ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றின் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. அவற்றின் குறியீடு பெயர் சால்ஃபிஷ் மற்றும் மார்லின் ஆகும். தற்பொழுது கூகுள் நெக்சஸ் மார்லின் குறியிடூ பெயரிலான ஸ்மார்ட்போன் ஜீக் பெஞ்ச்மார்க் சோதனை ரிபோர்ட் கிடைத்துள்ளது. இரு மொபைல் போன்களும் ஹெச்டிசி நிறுவனத்தால் தயாரிக்கப்படலாம் என கருதப்படுகின்றது.

நெக்சஸ் மார்லின்

கூகுள் நெக்சஸ் மார்லின் ஹெச்டிசி நிறுவனத்தால் தயாரிக்கப்படலாம். மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய மொபைலாக புதிய வசதிகள் மற்றும் நவீன சிறப்பு வசதிகளுடன் புதிய ஆண்ட்ராய்டு நெளகட் இயங்குதளத்தில் செயல்படும்.
4ஜிபி ரேம் கொண்டு சிங்கிள் கோர் மற்றும் மல்டி கோர் பிராசஸருடன் நடத்தப்பட்ட சோதனையில் மிகச்சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியுள்ளது.

கூகுள் நெக்சஸ் மார்லின் ஸ்மார்ட்போன் நுட்பவிபரங்கள்

 • தயாரிப்பாளர் HTC 
 • குவாட்-கோர் குவால்காம் பிராசஸர்
 • 5.5″ QHD (2560×1440) AMOLED டிஸ்பிளே
 • USB-C போர்ட்
 • 12MP பிரைமரி கேமரா 
 • 8MP முன்பக்க கேமரா
 •  கைரேகை ஸ்கேனர் பின்புறத்தில்
 • 4GB ரேம்
 • 3450mAh பேட்டரி 
 • Bottom-firing ஸ்பீக்கர்கள்
 • 32/128GB என இருவிதமான சேமிப்பில்
 • பூளூடூத் 4.2
வருகின்ற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Google Nexus Marlin with 4GB RAM