கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பிராண்டை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் ஐபோனுக்கு நேரடியான சவாலாக கூகுள் ஸ்மார்ட்போன் விளங்கும்.

கூகுள் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் திட்டம் உறுதியானது

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை கொண்டு நெக்சஸ் மாடல்களை மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் தயாரித்து வந்தாலும் புதிதாக பிரிமியம் அம்சங்களுடன் மிக சிறப்பான முறையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கூகுள் மொபைல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த மாதம் அளித்த பேட்டி ஒன்றில் கூகுள் சொந்தமாக மொபைல் தயாரிக்கும் திட்டம் எதுவும் கையில் இல்லை என தெரிவித்திருந்தாலும் தற்பொழுது வெளியாகியுள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் கூகுள் பிராண்டின் பெயரில் புதிய மொபைல்போன் வடிவமைப்பு அதற்கு உண்டான் சிப்கள் போன்றவற்றை தயாரிக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் திட்டம் உறுதியானது

தற்பொழுது கூகுள் நிறுவனம் பிக்சல் என்ற பெயரிலான பிராண்டில் க்ரோம்புக் பிக்சல் மற்றும் பிக்சல் சி என்ற பெயரிலான டேப்ளட் போன்றவற்றை தயாரித்து வருகின்றது. இந்த வருடத்தின் இறுதிக்குள் கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் பிராண்டு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக 9to5 கூகுள் தகவல் வெளியிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here