மெட்டல் பாடியுடன் கூல்பேட் நோட் 5 லைட் அறிமுகம்

Ads
ரூ.8199 விலையில் பல்வேறு வசதிகளை கொண்ட பட்ஜெட் விலை மாடலாக 5 அங்கு திரையுடன் கூல்பேட் நோட் 5 லைட்  மொபைல் சந்தைக்கு வந்துள்ளது.

கூல்பேட் நோட் 5 லைட்

கூல்பேட் நோட் 5 லைட் மொபைல்  5 அங்குல IPS LCD திரையுடன் 720×1280 பிக்சல் தீர்மானத்தை பெற்று 294 PPI பிக்சல் அடர்த்தி கொண்டதாக விளங்குகின்றது. யுனிமெட்டல் பாடி டிசைன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் கேமராவுக்கு கீழாக அமைந்துள்ளது.

இந்த கருவியில் 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்பையாக கொண்ட கூல் UI 8.0  தளத்தில்செயல்படுகின்றது. மீடியாடெக் MT6735CP  எஸ்ஓசியுடன் இணைந்து செயல்படுகின்ற  3GB உடன் இணைந்த உள்ளடங்கிய சேமிப்பு திறன்  16GB ஆகும். மேலும் 64GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி உதவியுடன் சேமிப்பை அதிகரிக்கலாம்.

கூல்பேட் நோட் 5 லைட் மொபைலின் பின்புறத்தில் 13MP ரியர் கேமரா உடன் இணைந்த PDAF மற்றும் எல்இடி  ஃபிளாஷ் போன்றவற்றுடன் 8MP முன்புற செல்ஃபீ கேமராவுடன் இணைந்த எல்இடி  ஃபிளாஷ்  கொண்டு செயல்படுகின்றது.

2500mAh பேட்டரி திறனுடன் விளங்கும் இந்த கருவியில் 4ஜி எல்டிஇ ,  VoLTE, வை-ஃபை 802.11 b/g/n, புளூடூத் 4.0, USB OTG போன்றவற்றுடன் கிரே மற்றும் கோல்டு வண்ணங்களில் இன்று முதல் (17/03/2017) கிடைக்கின்றது.

கூல்பேட் நோட் 5 லைட் நுட்ப விபரம்
  • 5 இன்ச் (1280×720) HD IPS டிஸ்ப்ளே
  • மீடியாடெக் MT6735CP பிராஸசர்
  • 3GB ரேம் 16GB இண்டர்னல் மெமரி 3
  • 64GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
  • 13MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • டூயல் சிம்
  • 4G VoLTE
  • 2500mAh பேட்டரி