ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட் கடவுள் சச்சின் பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ள  முதல் போன் பெயர் எஸ்ஆர்டி.போன் என்ற பெயரில் மே மூன்றாம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்மார்ட்ரான்

  • ஸ்மார்டிரான் பெங்களூரைச் சேர்ந்த இந்திய நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனம் டி.போன் என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் மற்றும் டி.புக் என்ற லேப்டாப் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.
  • மே 3ல் புதிய srt.phone அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் பிரான்டிங் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி.போன் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரம் செய்துள்ள போதும், ஸ்மார்ட்போன்களுக்கு என முதன்முறையாக இந்தியாவின் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்துள்ளார்.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில் இந்த சாதனத்தின் எந்த நுட்ப விபரங்களும் குறிப்பிடபடவில்லை, யூக செய்திகளின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் ஆப்ஷனுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக விளங்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள ஸ்மார்டிரான் டி.போன் மாடலில் (t.phone) AMOLED முழு எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் உடன் கூடிய 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஹைப்ரிட் லேப்டாப் ஒன்றும் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் இந்த நிறவனம் க்வால்காம் நிறுவனத்திடமிருந்து WCDMA, CDMA2000 மற்றும் 4G/LTE ஆகிய ஆதரவு பெற்ற கருவிகளை உருவாக்கு, மேம்படுத்துவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.