மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டென்டுல்கர் அவர்களின் பிரத்யேக டிஜிட்டல் ஆப் 100MB என்ற பெயரில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் பிரத்யேகமான 100MB சச்சின் ஆப் கிடைக்கும்.

சச்சின் டென்டுல்கர் ஆப் 100MB அறிமுகம் : டிஜிட்டல் இன்னிங்ஸ்

சச்சின் டென்டுல்கர்

ஆப் அறிமுகத்தின் பொழுது பேசிய டென்டுல்கர் கூறுகையில்  நண்பர்கள் மற்றும் உள்பட அனைவரும் எனது வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸ் பற்றி கேள்விகளை அடிக்கடி கேட்டதை தொடர்ந்து அதன் தொடக்கமே இந்த டிஜிட்டல் இன்னிங்ஸ் எனது முதல் இன்னிங்ஸ் 24 ஆண்டுகால கிரிகெட் வாழ்க்கை என தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் நோக்கிலே இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலில் சச்சின் அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் உள்பட பல்வேறு தகவல்களை உடனடியாக பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே போன்றவற்றில் 100MB என தேடி தரவிறக்கி கொள்ளலாம். 100MB என்றால் 100 Master Blaster என்பது விளக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here