சில மாதங்களுக்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிப்பதனால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கேலக்ஸி நோட் 7 பேட்டரி வெடிப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடிக்க காரணம் என்ன ?

கேலக்ஸி நோட் 7

கேலக்ஸி நோட் 7 பேட்டரி பிரச்சனையால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விற்பனை செய்யப்பட்ட அனைத்து நோட் 7 மாடல்களும் திரும்ப பெறப்பட்ட நிலையில் வெடிப்பிற்கான உண்மையான பின்னனி தயாரிப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரியின் அளவுகளினால் தான் என முதற்கட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வால் ஸ்டீரிட் (WSJ) வெளியிட்டுள்ள செய்தியில் முறையற்ற வடிவத்தின் காரணமாக வெப்பம் அதிகரித்ததே மேலும் சில தயாரிப்பு குறைபாடுகளும் உள்ளதாக முதற்கட்டமாக சில விபரங்கள் கசிந்துள்ளது. பேட்டரி பிரச்சனையில் தவறான வடிவமைப்பினால் பாஸ்டிவ் மற்றும் நெகட்டிவ் போல்களின் தவறான பொருத்தம் மற்றும் பேட்டரி செல்களின் தவறான அழுத்தமே என தெரிய வந்துள்ளது.

மேலும் instrumental வெளியிட்டுள்ள அறிக்கையில் பேட்டரி மற்றும் மொபைலின் பேனல்களுக்கு இடையிலான இடைவெளியிலும் சில பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பட்டப்பட்டுள்ளது. அதாவது 0.1மிமீ இடைவெளிக்கு குறைவாக பேட்டரி மற்றும் இறுக அடைக்கப்பட்டிருக்கும் பேனல்களுக்கு இடையில் பொருத்தப்பட்டுள்ளதால் சாதரனமாகவே சார்ஜிங் மற்றும் டிஸ்சார்ஜிங் செய்வதில் ஏற்படும் அழுத்தங்களின் காரணமாகவே பேட்டரி செல்களில் ஏற்படுகின்ற அதிக அழுத்தம்தான வெடிக்க காரணம் என தெரிவிக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடிக்க காரணம் என்ன ?

கேலக்சி நோட் 7 வெடிப்பதற்கான காரணம் குறித்து ஆராய்ந்துவரும் தென்கொரியாவின் சாம்சங் முழுமையான விபரத்தினை நாளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here