வருகின்ற மார்ச் 29ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய சாம்சங் கேலக்ஸி S8  மற்றும் கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன் கருவிகள் மிக நேர்த்தியான வளைந்த எட்ஜ் கொண்ட டிசைனுடன் வரவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8 , கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன் படங்கள்

கேலக்ஸி S8 கருவி 5.8 அங்குல மற்றும் கேலக்ஸி S8+ 6.2 அங்குல என இருவிதமான  மாடல்ளில் AMOLED ஹெச்டி டிஸ்பிளேவுடன் வரவுள்ள நிலையில் புதிய மாடலில் ஹோம் சார்ந்த பட்டனே இல்லாமல் வரவுள்ளது.

இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸருடன் இணைந்த 4 ஜிபி ரேம் பெற்று 64ஜிபி சேமிப்பு திறனுடன் கூடுதலாக சேமிப்பு திறனை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி கார்டு ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி S8 , கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன் படங்கள்

மிக நேர்த்தியான டிசைனுடன் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாடலாக வரவுள்ள இதில் 3.5mm ஆடியோ ஜாக் , யூஎஸ்பி டைப் சி , மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றுடன் சிறப்பான கேமிரா பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய 12 மெகாபிக்சல் கேமிரா பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here