வருகின்ற மார்ச் 29ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் மாடலின் முக்கிய தகவல்கள் மற்றும் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. 5.8 அங்குல மற்றும் 6.2 அங்குல என இருவிதமான  மாடல்ளில் AMOLED ஹெச்டி டிஸ்பிளேவுடன் வரவுள்ளது.

 

 

சாம்சங் கேலக்ஸி S8

சமீபத்தில் வென்ச்சர்பீட் தளம் வெளியிட்டுள்ள படத்தின் வாயிலாக கேலக்ஸி எஸ்8 மாடலின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸருடன் இணைந்த 4 ஜிபி ரேம் பெற்று 64ஜிபி சேமிப்பு திறனுடன் கூடுதலாக சேமிப்பு திறனை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி கார்டு ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

மிக நேர்த்தியான டிசைனுடன் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாடலாக வரவுள்ள இதில் 3.5mm ஆடியோ ஜாக் , யூஎஸ்பி டைப் சி , மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றுடன் சிறப்பான கேமிரா பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய 12 மெகாபிக்சல் கேமிரா பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும்.

கேலக்ஸி எஸ்8 நுட்ப விபரம்

  •  Snapdragon 835 Processor
  • 4 GB RAM
  • ஆண்ட்ராய்ட் நௌகட் 7.0
  • 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் 1080p display
  • 64 GB internal storage
  • 12 MP பின்புற கேமரா
  • விலை – ரூ.59000 (5.8 inch)
  • விலை – ரூ.68000 (6.2 inch)

வருகின்ற மார்ச் 29 ,2017யில் அறிமுகம் செய்யப்பட உள்ள சாம்சங் கேலக்சி எஸ்8 ஏப்ரல் மத்தியில் டெலிவரி தொடங்கப்படலாம்…மேலதிக விபரங்களுக்கு கேட்ஜெட்ஸ் தமிழன் தளத்துடன் இணைந்திருங்கள்…