சியோமி நிறுவனத்தின் எம்ஐ பிராண்டின் ஃபிட்னஸ் பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்டெல் சிப்செட் கொண்ட சியாமி ஸ்மார்ட் ஷூ சீனாவில் ரூ.2800 மதிப்பிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட் ஷூ

இன்டெல் பிராசஸர் கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலணிகள் 90 Minutes Ultra Smart Sportswear என்ற பெயரில் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை கொண்டதாக விளங்கும் இந்த ஷூவில் இடம்பெற்றுள்ள பிராசஸர்கள் வாயிலாக பலதரப்பட்ட தகவல்களை வழங்குமாறு வந்துள்ளது.

இந்த காலணிகள் நடப்பது , ஓடுவது , ஏறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது அதனை ண்காணித்து எவ்வளவு தொலைவு பயணம் மேற்கொள்ளப்பட்டது விவரங்களை சேமித்து வைக்கின்றது. மேலும் நடப்பது, ஓடுவது போன்ற செயல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சராசரி வேகம் மற்றும் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டுள்ளன போன்ற விபரங்களை அறிய இயலும்.

மேலும் சியோமி ஸ்மார்ட் காலணி கீழே விழுவதனை தடுக்கும் ஆன்ட்டி ஸ்கிட் வசதி , ஏர் குசைன், பாக்ரீயா ஏதிர்ப்புகளை கொண்டதாகவும் உள்ளங்கால்கள் சிறப்பான காலணிக்குள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஷூ கருப்பு மற்றும் நிலம் (ஆண்களுக்கு) மேலும் கருப்பு ,பிங்க் (பெண்களுக்கு) என நான்குவண்ணங்களுடன் கூடுதலாக சிறப்பு நீல நிறம் கொண்ட ஷூ இருளான இடங்களில் ஒளிரும் தன்மையை கொண்டதாக வந்துள்ளது.

சீனாவின் Mi தளத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஷூக்கள் விலை ரூ. 2,800 (CNY300) . ஏப்ரல் 15 முதல் டெலிவரி தொடங்கப்படுகின்றது.