வருகின்ற ஏப்ரல் 19ந் தேதி சீனாவின் ஜியோமி நிறுவனத்தின் சியோமி Mi 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. Mi 6 ஆரம்ப விலை ரூ. 23,000 த்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சியோமி Mi 6 மொபைல் அறிமுக தேதி அறிவிப்பு

சியோமி Mi 6 மொபைல்

  • 4ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் ஆப்ஷனில் சியோமி எம்ஐ6 மொபைல் சந்தைக்கு வரலாம்.
  • 4ஜிபி மாடல் $320 அல்லது ரூ. 22,550 மற்றும் 6ஜிபி மாடல் $380 அல்லது ரூ. 26,500 விலையில் தொடங்கலாம்.
  • ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்  உடன்  5.2 இன்ச் QHD திரையை பெற்றிருக்கும்.

சியோமி Mi 6 மொபைல் அறிமுக தேதி அறிவிப்பு

ஆண்ட்ராய்டு 7.0.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட  MIUI 9.0 இயங்குதளத்தில் செயல்படும் வகையிலான எம்ஐ6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்  உடன்  5.2 இன்ச் 1440 பிக்சல் தீர்மானத்தை பெற்ற திரையுடன், 2.5D வளைந்த கிளாஸ், 4GB ரேம் உடன் 32 GB உள்ளடங்கிய மெமரியும், மற்ற மாடலில் 4GB ரேம் உடன் 64GB இன்டெர்னல் மெமரியும் வழங்கப்படலாம், டாப் மாடல் 6GB ரேம் உடன் 128GB இன்டெர்னல் மெமரி என மொத்தம் மூன்று விதமான வேரியன்டில் கிடைக்க பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

உயர்வகையில் ஹெச்டி படங்கள் மற்றும் 4K வீடியோ பதிவு செய்யும் வகையில் 12 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சியோமி Mi 6 மொபைல் அறிமுக தேதி அறிவிப்பு

வருகின்ற ஏப்ரல் 19ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள MI6 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.22,500 ஆக அமைந்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here