வருகின்ற ஏப்ரல் 16ந் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ள சியோமி Mi 6 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியாகியுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் உயர்ரக பிரிவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் பல்வேறு வசதிகளை பெற்றதாக விளங்கும்.
சியோமி Mi 6 ஸ்மார்ட்போன் வருகையா ?

சியோமி Mi6

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 9.0 தளத்தில் இயங்கும் வகையிலான எம்ஐ6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்  உடன்  5.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ், 4GB ரேம் உடன் 32 GB இன்டெர்னல் மெமரியும், மற்ற மாடலில் 4GB ரேம் உடன் 64GB இன்டெர்னல் மெமரியும் வழங்கப்படலாம், டாப் மாடல் 6GB ரேம் உடன் 128GB இன்டெர்னல் மெமரி என மொத்தம் மூன்று விதமான வேரியன்டில் கிடைக்க பெறலாம்.
சியோமி Mi 6 ஸ்மார்ட்போன் வருகையா ?
உயர்தர எச்டி படங்கள் மற்றும் 4கே வீடியோ பதிவு செய்யும் வகையில் 19 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். சியோமி Mi6 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.19,500 முதல் தொடங்கலாம். எதிர்பார்க்கப்படுகிறது.  3400mAh  திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்றிருக்கும்.
Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ. ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ , VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்கப்படும்.
சியோமி Mi6 விலை விபரம்
  • 3GB/32GB – ரூ. 19500
  • 4GB/64GB – ரூ. 22500
  • 6GB/128GB – ரூ. 24500

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here