போக்கிமான் கோ ஆண்ட்ராய்டு விளையாட்டு தீயாக உலக முழுவதும் பரவியுள்ள நிலையில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவலை சீனாவின் ஊடகங்கள் வெளியிடுகின்றது.

சீனாவை வீழ்த்த சதி நடக்கின்றதா ? அமெரிக்கா, ஜப்பான் கூட்டு முயற்சியா : போக்கிமான் கோ

அமெரிக்காவிலும் சில குறிப்பிட்ட நாடுகளிலும் மட்டுமே போக்கிமான் கோ கேம் வெளிவந்துள்ள நிலையில் மற்ற நாடுகளில் விரிவுப்படுத்த நின்டென்டோ கோ நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்படாத நாடுகளிலும் விளையாடி வரும் நிலையில் சீனாவிலும் பிரசத்தி பெற்று போக்கிமான் கோ விளங்குகின்றது. ஜப்பானை தயாகமாக கொண்ட நின்டென்டோ கோ நிறுவனத்தின் தயாரிப்பான போக்கிமான் கோ கேம் விளையாட்டின் வாயிலாக கூகுள் மேப் பெருமளவு பயன்படுத்தப்படுவதனால் வீதிகளிலும் புதர்களிலும் போக்கிமானை தேடி வருகின்றனர்.

உலகின் முன்னனி ஸ்மார்ட்போன் சந்தையான சீனாவில் கேமிங் விளையாட்டுகள் மிக பிரபலமாக இருந்து வருவதனால் போக்கிமான் கோ கேமும் பிரபலமாகி உள்ளது. சீனாவின் வெயிபோ (weibo) வெளியிட்டுள்ள செய்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

சீனாவை வீழ்த்த சதி நடக்கின்றதா ? அமெரிக்கா, ஜப்பான் கூட்டு முயற்சியா : போக்கிமான் கோ

சீனாவின் ராணுவ ரகசியங்களை பெறுவதற்கான முயற்சியில் ஈடுப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது. அமெரிக்காவின் கூகுள் மேப்ஸ் மற்றும் ஜப்பான் நின்டென்டோ நிறுவனமும் இணைந்து செயல்படுதவதனால்  வீதிகளில் போக்கிமானை தேடி கிடைக்காமல் பல இடங்களில் மக்கள் தேடுவதனால் அனுமதி மறுக்கப்பட்ட ராணுவ தளங்கள் , வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் போக்கிமான் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். எனவே அங்கு போக்கிமானை தேடி மக்கள் வரும்பொழுது கூகுள் மற்றும் நின்டென்டோ அந்த தகவலை சேகரித்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் வாயிலாக ஆபத்தான நேரங்களில் மிக முக்கியமான ராணுவ தளங்களை தாக்கினால் சீனாவினை வீழ்த்த அது காரணமாகிவிடும்.எனவே போக்கிமான் கோ கேம் விளையாட வேண்டாம் என மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சீனாவை வீழ்த்த சதி நடக்கின்றதா ? அமெரிக்கா, ஜப்பான் கூட்டு முயற்சியா : போக்கிமான் கோ

இதுகுறித்து கருத்து தெரிவித்த சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில் போக்கிமான் கோ கேமினை நான் விளையாடவில்லை இன்னும் தற்பொழுது வெளியாகியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை என லீ கங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க ; இந்தியாவில் போக்கிமான் கோ கேம் விளையாடுவது எவ்வாறு

சீனாவில் எண்ணற்ற கூகுள் சேவைகளுக்கு தடை உள்ளது. மேலும் மிக வலுவான இணைய கட்டுப்பாடு மிக்க சீனாவில் போக்கிமான் கோ வெளியாகுவதனை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here