நின்டென்டோ சூப்பர் மேரியோ ரன் கேம் கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் மேரியோ ரன் விளையாட்டின் இலவச பகுதியில் வரையறையான விபரங்களை மட்டுமே வழங்கியுள்ளது.

சூப்பர் மேரியோ ரன் கேம் ஆண்ட்ராய்டில் அறிமுகம்

சூப்பர் மேரியோ ரன்

  • தற்பொழுது இந்தியாவிலும் இந்த கேம் கூகுள் பிளே ஸ்டோரிலே தரவிறக்கம் செய்யலாம்.
  • மூன்று விதமான மோட்களை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
  • வோர்ல்டு டூர் , ட்ராட் ராலி மற்றும் கிங்டம் பில்டர் போன்றவை ஆகும்.
  • மூன்று மோடுகளுக்கு பிறகு ரூ.800 மதிப்பில் மற்ற மோட்களை வாங்க இயலும்.

முதன்முறையாக ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் டிசம்பர் 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் மேரியோ கேமின்  நகலான கூகுள் பிளே ஸ்டோரில் இன்று முதல் சர்வதேச அளவில் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆப்பிள் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட 2வது பதிப்பு மாடலும் இன்று முதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்ட்ராய்டில் 57 எம்பி அளவினை பெற்றதாக வந்துள்ளது.

சூப்பர் மேரியோ ரன் கேம் ஆண்ட்ராய்டில் அறிமுகம்

தரவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் Super Mario Run என்று தேடி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here