உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்றவை எவ்வாறு பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டுகின்றன என அறிந்து கொள்ளலாம்.

டெக் நிறுவனங்கள்

பில்லியன் டாலர்களுக்கு மேல் வருவாயை பெறும் இந்நிறுவனங்களுக்கு வருவாய் எவ்வாறு வருகின்றது என்பதனை விஷூவல் கேப்ட்லிஸ்ட்ஸ் என்ற தளம் விளக்கியுள்ளது. அதன் விபரம் பின் வருமாறு ;-

ஆப்பிள்

உலகின் அதிக மிதிப்புமிக்க பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 63 சதவிகித பங்களிப்பினை ஐபோன் வாயிலாக பெறுகின்றது. ஐபேட்கள் 10 சதவிகதமும், ஐமேக் 11 சதவிகிதமும் ஆப்பிள் ஐ கிளவுட், ம்யூசிக் மற்றும் ஐடியூன்ஸ் மூலம் 11 சதவிகிதமும் மற்ற துனைக்கருவிகள் வாயிலாக 4 சதவித வருமானத்தை ஆப்பிள் ஈட்டுகின்றது.

ஆல்ஃபாபெட் (கூகுள்)

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக விளங்கும் ஆல்ஃபாபெட் தனது மொத்த வருமானத்தில் 88 சதவிகிதத்தை விளம்பரங்கள் வாயிலாக அதாவது கூகுள் அட்வோர்ட்ஸ் மற்றும் யூடியூப் மூலம் பெறுகின்றது. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் பிக்சல் பொருட்கள் வாயிலாக 11 சதவிதமும் மீதி ஒரு சதவிகிதத்தை கூகுள் ஃபைபர் வாயிலாக பெறுகின்றது.

 

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் ஆபிஸ் வாயிலாக 28 சதவிகித வருமானமும், 22 சதவிகிதத்தை வின்டோஸ் செர்வர் மற்றும் ஆசூர் வாயிலாகவும், எக்ஸ்பாக்ஸ் வழியாக 11 சதவிகிதம், வின்டோஸ் ஓஎஸ் 9 சதவிகிதம், பிங் மூலம் 7 சதவிகிதம் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக 5 % மற்றும் மற்றவை வாயிலாக 18 சதவிகித வருமானத்தை பெறுகின்றது.

பேஸ்புக்

சமூக வலைதளங்களில் முன்னணியாக விளங்குகின்ற பேஸ்புக் தனது மொத்த வருமானத்தில் 97 சதவிகிதம் விளம்பரங்கள் வாயிலாகவும், மற்ற 3 சதவிகிதத்தை வகைப்படுத்தப்பட்ட விளம்பரத்தாலும் பெறுகின்றது.

அமேசான்

உலகின் முன்னணி இ-காமர்ஸ் தளமாக விளங்கும் அமேசான் விற்பனை வாயிலாகவும் மற்ற சேவைகளான அமேசான் பிரைம் மற்றும் மீடியா சேவை வழியாக 18 சதவிகிதமும், அமேசான் வெப் சர்வீஸ் வழியாக 9 % மற்றவை வழியாக 1 சதவிதமும் பெறுகின்றது.