சென்னையில் நோக்கியா மொபைல்கள் தயாரிக்கப்படுமா ?

நோக்கியா 3 , நோக்கியா 5 , நோக்கியா 6 போன்ற மொபைல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நோக்கியா மொபைல்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை நோக்கியா ஆலை திரும்ப திறக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

நோக்கியா மொபைல்கள்

சமீபத்தில் சர்வதேச மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3310 உள்பட  நோக்கியா 3 , நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்ற மொபைல்கள் ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஹெச்எம்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நோக்கியாவின் புதிய மொபைல்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் வாயிலாகவே தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் உருவாகலாம் என தெரிகின்றது.

Nokia 3 மொபைல் விலை EUR 139 (தோராயமாக Rs. 9,800) , Nokia 5 ஸ்மார்ட்போன் விலை EUR 189 (தோராயமாக Rs. 13,500). உயர்ரக நோக்கியா 6 கருவியின் விலை EUR 229 (தோராயமாக Rs. 16,000). மேலும் ஃப்யூச்சர் ரக நோக்கியா 3310 (2017) விலை EUR 49 (தோராயமாக Rs. 3,500) இருக்கலாம். ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நோக்கியா கருவிகள் இந்தியாவில் கிடைக்கும்.

தகவல் உதவி : fonearena

Recommended For You