ரூ.5 லட்சம் மதிப்புள்ள 12 போலி ஐபோன்களை திருப்பி அனுப்பிவைத்த குற்றத்துக்காக நவீன் எனபவர் கைது செய்யபட்டுள்ளார். தான் வேலை செய்த டெலிவரி நிறுவனத்திலே மோசடி செய்து சிக்கியுள்ளார்.

சென்னை மாதவரம் பகுதியில் அமைந்துள்ள பிளிப்கார்ட் கிடங்கில் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த நவீன் (21) என்பவர் போலியான முகவரிகளை கொண்டு ஆப்பிள் ஐபோன்களை ஆர்டர் பெற்று டெலிவரி செய்ய எடுத்து செல்லும் சமயத்தில் போலியான ஐபோன்களை மாற்றி வைத்துவிட்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பொழுது போலியான ஐபோன் எனவே இந்த ஐபோன் வேண்டாம் என வாடிக்கையாளர் தெரிவித்ததாக கூறிய பிளிப்கார்ட் கிடங்குக்கு திரும்ப எடுத்து வந்து ஒப்படைத்துள்ளார்.

இதே மாதிரி குறைந்த கால இடைவெளியிலே புதுவண்ணாரபேட்டை பகுதியிலே 12 ஐபோன்கள் திரும்ப வந்ததை தொடர்ந்து விசாரனையில் ஈடுபட்டு பிளிப்கார்ட் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ள 12 ஐபோன்களும் போலியானவை என உறுதி செய்து பிளிப்கார்ட் வேர்ஹவுஸ்க்கு செய்தி அனுப்பியுள்ளது. உடனடியாக சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வண்ணாரபேட்டை பகுதி டெலிவரி பாய் நவீனை விசாரித்ததில் அவர்தான் குற்றவாளி என உறுதி செய்துள்ளனர்.
 மேலும் அவர் வசம் இருந்த 12 ஐபோன்களையும் போலீசார் கைப்பறியுள்ளனர்.