வருகின்ற செப்டம்பர் 11ந் தேதி சியோமி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 9 இயங்குதளத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த ஸ்மார்ட்போன் குறைந்த பெசல் கொண்டதாக வரவுள்ளது.

குவால்காம் நிறுவனத்தின் weibo அதிகார்வப்பூர்வ பக்கத்தில் மீ மிக்ஸ் 2 மொபைல் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பெற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 6.4 அங்குல திரையுடன் 6ஜிபி மற்றும் 8ஜிபி என இருவிதமான ரேம் தேர்வுகளில் 128ஜிபி மற்றும் 256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளை கொண்டதாகவும் வரவுள்ளது.