ஜிமெயில் மூலம் இனி பணம் அனுப்பலாமா..! எவ்வாறு?

இணைய உலகின் முன்னணி தேடுதளமான கூகுளின் ஜிமெயில் ஆண்ட்ராய்டு சேவையில் தற்பொழுது பணம் அனுப்பவும் , பெறவும் இயலும் இந்த சேவை முதற்கட்டமாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.

பணம் அனுப்பலாம்

ஜிமெயில் மின்னஞ்சல் அல்லது கூகுள் வாலட் இல்லாதவர்களுக்கும் பணத்தை அனுப்பபும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகின்ற இந்த சேவை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.

ஜிமெயில் ஆப் அல்லது வெப் வாயிலாக மின்னஞ்சல் அல்லது கூகுள் வாலட் முகவரியை  உள்ளிட்டு அட்டாச்மென்ட் பக்கத்தில் உள்ள பொத்தானை க்ளிக் செய்து பணம் அனுப்புதல் (Send Money) அப்ஷனை தேர்ந்தெடுத்து எவ்வளவு என்ற தொகையை குறிப்பிட்டு உங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு போன்றவற்றில் இருந்து அனுப்பலாம். மேலும் இதில் மெமோ (memo) ஆப்ஷனும் உள்ளது.

பணம் பெறுபவர்

பெறுபவரிடம் ஜிமெயில் கணக்கு இல்லையென்றாலும்  பணத்தை கிளைம் செய்து வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பட்டுள்ள பணத்தை மெயலில் திறக்கும்பொழுது கிளைம் மணி (Claim Money) ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும்.

அடுத்த சில மாதங்களில் ஆப்பிள் ஐஓஎஸ் உள்பட அனைத்து நாடுகளுக்கும் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

Recommended For You