பார்சிலோனாவில் நடைபெற்று வரும் 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் கருத்தரங்கில் ஜியோனி A1 , A1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் ஏ1 , ஏ1 பிளஸ் மாடல்கள் வரவுள்ளது.

ஜியோனி A1

ஜியோனி A1 கருவியில் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டு 5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன்  மீடியாடெக் ஹீலியா P10 பிராசஸருடன் இணைந்த 4GB  உடன் 64GB வரையிலான சேமிப்பு திறனை பெற்ற கருவியாக ஏ1 விளங்குகின்றது. கூடுதலாக சேமிப்பு திறனை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி கொள்ளலாம்

16 மெகாபிக்சல் பின்புற கேமராவில் PDAF மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்றவை இடம்பெற்றுள்ளது.  சிறப்பான செல்ஃபீபடங்களை எடுக்கும் நோக்கில் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா இணைக்கபட்டுள்ளது.

நாள் முழுமைக்கும் பேட்டரி திறனை வெளிப்படுத்தும் 4,010mAh திறன் கொண பேட்டரியுடன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது. மற்ற தொடர்புகள் டூயல் சிம் சப்போர்ட், 4G LTE, வைஃபை, புளூடூத் 4.1, GPS, மற்றும் USB OTG.

ஜியோனி A1 பிளஸ்

ஜியோனி A1 பிளஸ் கருவியில் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டு 6.0 அங்குல முழு ஹெச்டி திரையுடன்  மீடியாடெக் ஹீலியா P25 பிராசஸருடன் இணைந்த 4GB  உடன் 64GB வரையிலான சேமிப்பு திறனை பெற்ற கருவியாக ஏ1 விளங்குகின்றது. கூடுதலாக 256GB சேமிப்பு திறனை அதிகரிக்க  மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி கொள்ளலாம்

13 மெகாபிக்சல்  மற்றும் 5 மெகாபிக்சல் பின்புற கேமராவில் PDAF மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்றவை இடம்பெற்றுள்ளது.  சிறப்பான செல்ஃபீ படங்களை எடுக்கும் வகையில் Bokeh-Selfie Mode கொண்டுமுன்புறத்தில் 20 மெகாபிக்சல் கேமரா இணைக்கபட்டுள்ளது.

நாள் முழுமைக்கும் பேட்டரி திறனை வெளிப்படுத்தும் 4,550mAh திறன் கொண பேட்டரியுடன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது. மற்ற தொடர்புகள் டூயல் சிம் சப்போர்ட், 4G LTE, வைஃபை, புளூடூத் 4.1, GPS, மற்றும் USB OTG.

ஜியோனி A1 , A1 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.வருகின்ற மார்ச் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.