இந்திய சந்தையில் ஜியோமி நிறுவனம் மிகச்சிறப்பான வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கின்ற ஜியோமி ரெட்மி 4 மற்றும் ரெட்மி 4 பிரைம் என இரு ஸ்மார்ட்போன்களை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

சியோமி ரெட்மி 4, ரெட்மி 4 பிரைம் இன்று அறிமுகம்..!

ஜியோமி ரெட்மி 4, ரெட்மி 4 பிரைம்

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இந்தியாவில் முதல் எம்ஐ ஹோம் ஸ்டோரை பெங்களூருவில் திறந்தள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டீஸர் படத்தின் வாயிலாக அடுத்த ஸ்மார்ட்போனை மே 16ல் விற்பனைக்கு வருவதை உறுதி செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக ரூபாய் 5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4ஏ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் தொடர்ந்து இரண்டு மாதங்களாகவே மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்ற நிலையில் இந்த மொபைலுக்கு மேலாக நிலை நிறுத்தப்படும் வாய்ப்புள்ள இரு மொபைல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சியோமி ரெட்மி 4, ரெட்மி 4 பிரைம் இன்று அறிமுகம்..!

சியோமி ரெட்மி 4 மொபைலில் 5 அங்குல ஹெச்டி 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 SoC பிராசஸர் பெற்று 2GB ரேம் வசதியுடன் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்றுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் 4100mAh பேட்டரியை பெற்றிருக்கும்.

சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போன் விலை CNY 699 (Rs.6,900)

சியோமி ரெட்மி 4 பிரைம் ஸ்போர்ட்ஸ் மொபைலில் 5.5 அங்குல முழு ஹெச்டி 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் 2GHz ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 SoC பிராசஸர் பெற்று 3GB ரேம் வசதியுடன் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்றுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் 4100mAh பேட்டரியை பெற்றிருக்கும்.

சியோமி ரெட்மி 4 பிரைம் ஸ்மார்ட்போன் விலை CNY 899 (Rs.8,900)

இரு ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையிலான MIUI 8 இயங்குதளத்தில் இரு மொபைல்களும் வரவுள்ளது. அமேஸாஸ் தளத்தில் எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ளது.

சியோமி ரெட்மி 4, ரெட்மி 4 பிரைம் இன்று அறிமுகம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here