ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ 4ஜி சிம் சேவை ஏப்ரல் 1 முதல் கட்டணமாக மாற உள்ளதால் DND எனப்படுகின்ற தொல்லை தருகின்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருந்து பாதுகாகாப்பது எப்படி என அறிந்துகொள்ளலாம்.

ஜியோ சிம்

 • மைஜியோ ஆப் வழியாக ஜியோ சிம்மில் DND வசதியை ஏக்டிவேட் செய்யலாம்.
 • DND உதவியுடன் உங்களுக்கு தேவையான விளம்பரங்கள் அல்லது முழுதாக தடுக்கலாம்

DND என்றால் என்ன ?

டிராய் தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பின் வழிகாட்டுதலின் படி விளம்பரப்படுத்துதல் தொடர்பான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தவிர்க்கும் நோக்கில் வெளியிடப்பட்டதே டூ நாட் டிஸ்டர்பு எனப்படும் DND சேவையாகும்.

மைஜியோ ஆப்

உங்கள் ஜியோ நம்பரின் கணக்கினை பராமரிக்க உதவும் மைஜியோ ஆப்பில் உள்நுழைந்த பின்னர்…பினபற்ற வேண்டிய வழிமுறைகள்….

 • முதலில் முன்று பார் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தேர்வு செய்யுங்கள்..
 • பின்னர் அதில் ஜியோ பிரைம் மற்றும் Settings போன்ற ஆப்ஷன்கள் வரும்.
 • முதலில் Settings ⇒ Do Not Distrub ⇒ Select DND Preference

 • உங்களுக்கு எந்த மாதிரியான டிஎன்டி சேவை வேண்டும் என தேர்வு செய்யுங்கள்.. முழுதாக தடுக்க வேண்டுமா அல்லது சில மார்கெட்டிங் விளம்பரம் வேண்டுமா என்பதனை தேர்வு செய்யுங்கள்..
 • அதன் பின்னர் Submit பட்டனை கொடுத்தால் உங்கள் DND 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்து விடுவார்கள்..

2வது வழிமுறை

இந்த வழிமுறை அனைத்து சிம்களுக்கும் பொருத்தமான ஒன்றே ஆகும். 1909 என்ற எண்ணுக்கு அழைப்பு மேற்கொண்டோ அல்லது START 0 என 1909 என்ற எண்ணுக்கு மெசேஜ்அனுப்பி டிஎன்டி வசதியை ஆக்டிவேட் செய்யலாம்.

மேலும் குறிப்பிட்ட சில பிரிவுகளை தடுக்க

 1.  START 1 to 1909 (வங்கி , இன்ஸ்ஷூரன்ஸ் , கிரெடிட் கார்டு)
 2. START 2 to 1909 (ரியல் எஸ்டேட்)
 3. START 3 to 1909 (கல்வி)
 4. START 4 to 1909 (ஹெல்த்)
 5. START 5 to 1909 (ஆட்டோமொபைல் மற்றும் கன்சுயூமர் பொருட்கள்)
 6. START 6 to 1909 (ஐடி , தொலைதொடர்பு , ஒளிபரப்பு)
 7. START 7 to 1909 (சுற்றுலா)

மேலும் படிக்க – ஜியோ பிரைம் முழுவிபரம்