இந்திய தொலை தொடர்பு துறையை ஸ்தம்பிக்க வைத்த ஜியோ வியாபார தந்திரத்தை அடிப்படையாக கொண்டு, பானி பூரி வியாபரத்தை குஜராத்தை சேர்ந்த ஜியோ பானிபூரி கடைக்காரர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜியோ பானி பூரி

குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த ரவி ஜக்டம்பா என பானி பூரி கடை வைத்திருப்பவர் , முகேஷ் அம்பானி தொலை தொடர்பு நிறுவனத்தின் ஜியோ பெயரை பயன்படுத்தி பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றார். தற்பொழுது முன்னணி ஆங்கில செய்திதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில் சுவாரஸ்யமான வியாபார தந்திரம் வெளியாகியுள்ளது.

ரூ. 100 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு வரம்பற்ற பானி பூரிகளை சாப்பிடலாம் அதுவே நீங்கள் மாதந்திரம் ரூ.1000 செலுத்தினால் மாதம் முழுவதும் வரம்பற்ற பானிபூரிகளை சாப்பிடலாம் என அறிவிப்புடன் விற்பனை நடந்து வருகின்றது.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவெளியிட்டுள்ள வீடியோ தொகுப்பு