ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி வோல்ட்இ சேவையை பயன்படுத்தும் வகையில் LYF பிராண்டில் ஜியோ 4ஜி ஃபீச்சர் போன் ரூ. 2369 விலையில் விற்பனைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

LYF 4ஜி ஃபீச்சர் போன்

ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான சில்லறை வர்த்தக விற்பனை பிரிவின் ஸ்மார்ட்போன் பிராண்டாக விளங்கும் லைஃப் பிராண்டிலல் அறிமுகம் செய்யப்பட உள்ள வோல்ட்இ ஆதரவு பெற்ற 4ஜி சேவைக்கு ஏற்ற மொபைல் விலை ரூ. 2369 என 91மொபைல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த லைஃப் மொபைல் பற்றி நுட்ப விபரங்களில் ஆச்சிரியப்பட வைக்கும் வகையில் 2.4 அங்குல திரையுடன், 512 எம்பி ரேம் பெற்று 4ஜிபி உள்ளடங்கிய மெமரி வசதியுடன் கூடுதலாக சேமிப்பை அதிகரிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டையை இணைக்கலாம்.

இந்த மொபைலில் 2 மெகாபிக்சல் கேமரா, 4ஜி எல்டிஇ,வோல்டி , புளூடுத், NFC, ஜியோ ஆப்ஸ்கள் போன்றவற்றை பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்பாக ஜியோ 4ஜி மொபைல் குவால்காம் 205 பிராசஸர் பெற்ற மாடல் ரூ. 1800 எனவும், ஸ்பிரெட்டிரம் சிப்செட் பெற்ற மாடல் ரூ.1730 எனவும் செய்திகள் வெளிவந்தது.பலதரப்பட்ட செய்திகள் 4ஜி பட்டன் போன் பற்றி செய்திகள் வெளிவந்த நிலை உள்ளதால் அடுத்த சில வாரங்களில் அதிகார்வப்பூர்வமாக 4ஜி மொபைலை ரிலையன்ஸ் விற்பனைக்கு வெளியிடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.