எல்ஜி G6 மொபைல் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக எல்ஜி நிறுவனத்தின் டாப் ரேஞ்ச் மொபைலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எல்ஜி ஜி6 கருவியில் இடம்பெற்றுள்ள முக்கிய 5 அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எல்ஜி G6 மொபைல்

2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி ஜி6 கருவியில் வாட்டர்ப்ரூஃப் , இருவிதமான ஸ்கீரின் , உலகின் முதல் டால்பி விஷன் மற்றும்  HDR10 உள்பட பல வசதிகளை பெற்று விளங்குகின்றது.

டிஸ்பிளே

5.7  அங்குல QHD திரையுடன் வந்துள்ள இந்த கருவியில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 Soc பிராசஸருடன் இணைந்த 4GB ரேம் உடன் இணைந்த 32GB மற்றும் 64GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 2TB வரை சேமிப்பு திறனை விரிவாக்க இயலும்.

18:9 என்ற அளவில் கொடுக்கப்பட்டுள்ள அடுத்த ஸ்கிரினில் அறிவிப்புகளை பெறும் வகையிலும் மற்றும்ழு திரையில் வீடியோவினை காண உதவும் என்பதனால் விற்பனையில் உள்ள மொபைல்களிலே கூடுதல் நீளம் கொண்டதாக விளங்குகின்றது.

மல்டி விண்டோஸ்

விண்டோஸ் 10ல் உள்ளதை போன்ற மல்டி டாஸ்கிங் திரை அமைப்பினை கொண்டுள்ளது. குறிப்பாக பயன்படுத்தின்ற ஆப்ஸ்கள் மற்றும் அறிவிப்புகளை இலகுவாக பெறலாம்.

கேமரா

இரட்டை கேமராக்கள் 13 மெகாபிக்சலுடன் அமைந்து சிறப்பான படங்கள் மற்றும் உயர்தர 4கே ஹெச்டி வீடியோக்களை தரும் வகையில் அமைந்துள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா அமைந்துள்ளது. OIS எனப்படும் சிறந்த படங்களை தர உதவும் அமைப்பும் பெற்று விளங்குகின்றது.

ஹீட்டிங்

ஸ்மார்ட்போன்களில் உள்ள சூடாகும் பிரச்சனைக்கு தீர்வினை வழங்கும் வகையில் ஹீட் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை பெற்று விளங்குகின்றது.

வாட்டர் ப்ரூஃப்

கைரேகை ஸ்கேனர் உள்பட வாட்டர்  ப்ரூஃப் போன்றவை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக IP68 ரேட்டிங் அம்சத்தை கொண்டுள்ளதால் அதிகபட்சமாக 1.5 லிட்டர் ஆழத்தில் அரை மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் வந்துள்ளது. இது தவிர டஸ்ட் பாதுகாப்பு அம்சமும் இடம்பெற்றுள்ளது.

மற்றவை

கூகுள் அசிஸ்டென்ட் எல்ஜி G6 மொபைலில் முதன்முறையாக கூகுள் அசிஸ்டென்ட் வசதி சேர்க்கப்பட்டு OK Google வாயிலாக நேவிகேஷன் , வானிலை , வைஃபை உள்பட பல வசதிகளை பெறலாம்.