பரந்து விரிந்து தினமும் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துகொண்டுள்ள நிலையில் உங்களுக்கு எந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் உள்ளதா அதற்க்கு தீர்வாக இந்த பதிவு
டிசிஎல் 560 மொபைல் நுட்பவிபரம்
- திரை : 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே (1280 × 720 pixels)
- இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
- பிராசஸர் : 1.1 GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 210
- ரேம் : 2 GB
- கேமரா : 8 MP பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
- முன்பக்க கேமரா : 5 MP செல்ஃபீ கேமரா எல்இடி ஃபிளாஷ்
- சேமிப்பு : 16 GB (MicroSD upto 32 GB)
- பேட்டரி : 2500mAh சிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்
- மற்றவை : 4G VoLTE ,3G, Bluetooth, WiFi, GPS, Infrared , iris scanner
- விலை : 7,999
சிறப்பான கட்டமைப்பினை பெற்றிருக்கும் மொபைல்போனில் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள பேக் கவர் சிறப்பான க்ரிப் தன்மையை வழங்குவதுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. கைக்கு அடக்கமான வடிவமைப்புடன் டார்க் கிரே மற்றும் மெட்டல் கோல்டு என இரு நிறங்களில் கிடைக்கின்றது.
செயல்திறன்
டிசிஎல் 560 ஸ்மார்ட்மொபைலில் உள்ள 5.5 இன்ச் ஹெச்டி (1280 × 720 pixels) ஃபுல் லேமினேசன் திரையுடன் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸருடன் இணைந்த 2 ஜிபி ரேம் பெற்று ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளம் பெற்றுள்ளது. சிறப்பாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்டாக் ரோம் பெற்று பட்ஜெட் விலையில் சிறப்பாக அமைந்துள்ளது.
கேமரா
தெளிவான படங்களை வழங்கும் வகையிலான 8 மெகாபிக்சல் பின்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் எல்இடி ஃபிளாஷ் பெற்று விளங்குகின்றது. கேமரா வெளிச்சம் உள்ள இடங்களில் தெளிவான பட்களை வழங்குகின்றது.
முன்புறத்தில் அமைந்துள்ள 5 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது.
பின்புற கேமரா பெர்ஃபாமென்ஸ் வரிசையில் சராசரிக்கு மேல் தான் உள்ளது.
சிறப்பு வசதிகள்
கண்ணின் கருவிழி ஸ்கேனர் சிறப்பான பாதுகாப்பு அம்சமாகும்.
4ஜி எல்டிஇ ஆதரவு சேவை
ஹெடிஆர் , வீடியோ ஜூமிங் , பேஸ் டிராக்கிங் , லைட் வெயிட் யூஐ ஸ்டாக் ரோம் போன்றவை பெற்றுள்ளது.
பாஸ்டிவ்
- கண்கள் மூலம் ஆன்லாக் செய்யும் கண்ணின் கருவிழி ஸ்கேனர் சிறப்பான பாதுகாப்பு அம்சமாகும்.
- 8 மெகாபிக்சல் கேமரா நல்ல தெளிவான படங்களை வழங்குகின்றது.
- முன்பக்க செல்ஃபீ கேமராவுக்கு எல்இடி பிளாஷ்
- ஒருநாள் முழுமைக்கும் சிறப்பான பேட்டரி பேக்கப் கிடைக்கின்றது.
- பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்
நெகட்டிவ்
- வெளிச்சம் குறைவான இடங்களில் தெளிவான படங்களை பெற இயலவில்லை
- அதிக மெம்மரி உள்ள கேம்களை விளையாடுவதில் சற்று சிரமமாக உள்ளது.
ரூ.8999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிசிஎல் 560 சிறப்பு சலுகையாக ரூ.1000 தள்ளுபடியில் ரூ.7,999 விலையில் கிடைக்கின்றது.
ரேட்டிங் : 3.5/5