உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் தளத்தில் பல வருடங்களாக எதிர்பார்க்கப்படுகின்ற டிஸ்லைக் பொத்தான் பேஸ்புக் மெசென்ஜர் வாயிலாக முதன்முறையாக இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக் மெசென்ஜர்

டெக்கிரன்ச் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் எமோஜி வாயிலாக புதிதாக லைக் பட்டனுக்கு ஈடாகவே டிஸ்லைக் பட்டனும் சேர்க்கப்பட்டுள்ளதாக பீட்டா ஆப் வாயிலாக தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக மிக இலகுவாக இல்லை என்று செல்வதற்கு பதிலாக டிஸ்லைக் எமோஜியை அனுப்பலாம்.

பேஸ்புக் தளத்தில் அமைந்துள்ள மிகவும் சக்திவாய்ந்த லைக் பட்டனுக்கு போட்டியாக டிஸ்லைக் வேண்டும் என கேட்கப்பட்டு வந்தாலும் இதுவரை அதனை செயல்படுத்தும் நோக்கமே இல்லாமல் இருந்த பேஸ்புக் அதற்கு மாற்றாக லொள் , வாவ் , சோகம் மற்றும் கோபம் (lol, wow, sad, or angry ) போன்ற பேஸ்புக் ரியாக்ஷன் எமோஜிகளை அறிமுகம் செய்தது. தற்பொழுது அந்த ரியாக்ஷன் எமோஜிகள் சிறப்பான ஆதரவினை பெற்றிருந்தாலும் டிஸ்லைக் பட்டன் வேண்டும் என்ற எண்ணம் இன்றும் பலர் மனதில் உள்ளது.

அடுத்த மெசென்ஜர் மேம்பாட்டில் டிஸ்லைக் பட்டன் வருவது உறுதியாகியுள்ளது.