சர்வதேச தந்தையர் தினம் இன்றைக்கு கொண்டாடுப்படுவதனை ஒட்டி கூகுள் சிறப்பு கள்ளிச்செடி டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக அன்னையர் தினத்திலும் இதே போன்ற டூடுலை வெளியிட்டிருந்தது.

தந்தையர் தினம்

ஒவ்வொரு வருடமும் தந்தையர் தினமும் ஜூன் மாதத்தின் மூன்றாவது வார ஞாயிற்றுகிழைமைகளில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். மே மாதம் கொண்டாடுப்படுகின்ற அன்னையர் தினத்தன்று வெளியிடப்பட்ட அதே போன்ற கள்ளிச்செடிகளின் படங்களை கொண்டு 6 விதமான வகையில் தந்தையின் பாசத்தை பெருமைப்படுத்தும் வகையில் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

தந்தையர் தினம் வரலாறு

அமெரிக்க ராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் மற்றும் எல்லன் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் சொனாரா ஸ்மார்ட் டோட். சொனாரா 16 வயதை எட்டும்போது ஆறாவது பிரசவத்திற்கு சென்ற அவரது தாய் எல்லன் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். தாய் மறைவிற்கு பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல் தனது ஆறு பிள்ளைகளுக்கும் தந்தையும், தாயுமாக இருந்து அவர்களை  வளர்த்தெடுத்தார்.

தங்கள் தந்தை மீது கொண்ட அன்பினாலிம், பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த அவரது மகள் சொனாரா, அன்னையர் தினத்துக்கு 1909 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டதை அறிந்து அதை போல
தன் தந்தையின் பிறந்தநாள் தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து சர்வதேச தந்தையர் தினமானது, ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்தார். தந்தையின் அன்பினை உணர்ந்த மகளின் முயற்சியால் இன்றைக்கு தந்தையர் தினம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here