பேஸ்புக் சமூக வலைதளத்தின் வாயிலாக தற்கொலை தடுக்கும் வகையிலான புதிய உதவி பக்கத்தை பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து  AASRA ,தீபிகா படுகோன் மற்றும் லைவ் லவ் லாஃப் பவுண்டேஷன் போன்றவை இணைந்து வழங்குகின்றது.

உலக சுகாரார அமைப்பு 2014யில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக அளவில் அதிக தற்கொலை நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அதிகப்படியான எண்ணிக்கையை இந்தியா பெற்றுள்ளதாலும் தற்கொலை செய்து கொள்பவர்களின் வயது 18 முதல் 29 வயது வரை உள்ளவர்களே அதிகம் இருப்பதனாலுமே பேஸ்புக் இந்த பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைல் பார்க்க ; Best Selling mobiles in India

இந்த உதவி பக்கத்தில் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையிலான செயல்பாடுகளை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்கொலை தடுப்பு பக்கம் தமிழ் ,ஆங்கிலம்  , கன்னடா , மலையாளம் , தெலுங்கு , மராத்தி , உருது  , ஹிந்தி , பஞ்சாபி மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளிலும் கிடைக்கும். இதனை பெற உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள தேடுதல் பெட்டில் (Sucide) என டைப் செய்து தேடலாம்.

மேலும் படிக்க ; பேஸ்புக் 360 டிகிரி படம் தரவேற்றும் வசதி