சினிமா 3டி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நுட்பத்தின் வாயிலாக தியேட்டரில் இனி கண்களுக்கு கிளாஸ் இல்லாமல் குறிப்பிட்ட கோன அளவில் தியேட்டரில் எங்கிருந்து பார்த்தாலும் முப்பரிமான வடிவில் சினிமா படங்கள் தெரியும்.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (MIT) மற்றும் வெய்ஸ்மென் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் இரு பெரும் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து வடிவமைத்துள்ள புதிய சிறப்பம்சம் கொண்ட லென்ஸ்கள் மற்றும் கண்ணாடிகள் உதவியுடன் பார்வையாளர்கள் படத்தை 3டி வடிவில் கானலாம்.
MITயின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுன்னறிவு ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர் (Computer Science and Artificial Intelligence Lab – CSAIL ) உருவாக்கப்பட்டுள்ள சினிமா 3டி பற்றி பேராசிரியர் மேட்யூசிக் கூறுகையில் கிளாஸ் இல்லாமல் 3டி படங்களை பார்க்கும் தொலைக்காட்சிகள் இருந்தபொழுதிலும் பெரிய அளவிலான திரையரங்குகளுக்கு உண்டான அளவில் லென்ஸ் மற்றும் கிளாஸ் இல்லாத 3டி படங்களை பார்க்கும் முறை முதன்முறையா நுட்பரீதியாக மேம்பாடு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க ; அமேசான் பிரைம் என்றால் என்ன ?
அடுத்த சில வருடங்களுக்குள் முழுதாக பயன்பாட்டுக்கு சினிமா 3டி கிடைக்க உள்ளது. சினிமா 3டி வீடியோ இணைப்பு