
நிலவில் கால்தடம் பதித்த 50 ஆண்டு தினத்தை முன்னிட்டு அப்பல்லோ 11 விண்வெளிப் பயணத்தை பற்றிய சுவாரஸ்ய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம். 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
- அப்பலோ 11 ராக்கெட் 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நிலவை சென்றடைந்தது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.
- இன்றைய பண மதிப்பில் 200 பில்லியன் டாலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும்.
- அப்போலோ 11 பயணத்தில் ஆம்ஸ்டிராங்கும், அவருடன் நிலவில் நடந்த பஸ் ஆல்டிரினும் அணிந்திருந்தவை மெக்கானிக்கல் கைக்கடிகாரங்கள் ஆகும்.
- இந்த குழுவினர் 76 மணி நேரத்தில் பூமியிலிருந்து சந்திரனுக்கு 240,000 மைல்கள் பயணம் செய்தனர்.
- அப்பல்லோ 11 விண்வெளி ராக்கெட்டை ஏவிய சாட்டர்ன் V ராக்கெட் 203,400 கேலன் மண்ணெண்ணெய் எரிபொருள் மற்றும் 318,000 கேலன் திரவ ஆக்ஸிஜன் மூலம் எரிந்து விண்கலத்தை 38 மைல் தொலைவு வானத்தில் உயர்த்தியது.
- பூமிக்குத் திரும்பியதும், அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் ஆபத்தான நோய்க்கிருமிகளால் பாதிக்கபட்டிருந்தால் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
- நாசாவின் Lunar Reconnaissance Orbiter கேமரா நிலவில் எஞ்சியிருக்கும் ஆறு அமெரிக்க கொடிகளின் புகைப்படங்களை எடுத்தது. ஐந்து கொடிகள் நின்ற நிலையிலும் ஒரு கொடியானது அப்பல்லோ 11 விண்வெளி ராக்கெட் புறப்படும் உந்துதலால் வீழ்த்தப்பட்டிருக்கலாம்.
