ட்ராப்பிஸ்ட் – 1 அதாவது பூமியை போன்ற 7 கிரகங்களை இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 3 கிரகங்கள் மனிதர்கள் வாழ ஏற்ற தன்மையை கொண்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ராப்பிஸ்ட் – 1

 

ட்ராப்பிஸ்ட் – 1 (TRAPPIST-1) என்ற நட்சத்திரக் குடும்பத்தில்தான் பூமியைப் போன்ற 7 கிரகங்களும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவில் உள்ளதாக இந்தக் கிரகங்கள் இருக்கின்றது.

தற்பொழுது நாம் வசதித்து வரும்  சூரியக் குடும்பத்தின் வாழ்நாள் முடிவுக்கு வருகின்ற சூழ்நிலை உருவானும் கூட இந்த கோள்கள் உயிர் வாழ ஏற்றதாகவே விளங்கும் என நாசா தெரிவிக்கின்றது. பல்வேறு சமயங்களில் சிறிய அளவிலான கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகங்கள் பூமியினை போன்ற அளவுகளிலும் அமைந்திருப்பதே தனிசிறப்பாகும் என நாசா தெரிவித்துள்ளது.

கூகுள் டூடுல்

இந்த கண்டுபிடிப்பினை பெருமைப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை முகப்பில் வெளியிட்டுள்ளது. கூகுள் டூடுல் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.