உலகயளவில் மிகவும் பிரசத்தி பெற்ற செயலியாக விளங்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் செயிலி வாயிலாக நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் அழைப்புகள் மேற்க்கொள்ளப்படுவதாக வாட்ஸ்ஆப் செய்தி வெளியிட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் வாட்ஸ்ஆப் கால்கள் அழைக்கப்படுகின்றதா ?

பேஸ்புக் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக 1 விநாடிக்கு 1100 அழைப்புகளை பெற்று நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் வாட்ஸ்ஆப் அழைப்புகள் அழைக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் 1 பில்லியன் வாடிக்கையாளர்களை உலக அளவில் பெற்ற நிலையில் தற்பொழுது வாட்ஸ்ஆப் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் காலிங் வசதி ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் , விண்டோஸ் மற்றும் பிளாக்பெர்ரி போன்ற இயங்குதளங்களை கொண்டு செயல்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெற்றுள்ளது. இதன் போட்டியாளர்களாக விளங்கும் மற்ற மெசேஜ் சேவைகளான வைபர் மற்றும் ஸ்கைப் போன்றவைகள் கட்டணத்துடன் கூடிய வாய்ஸ் காலிங் சேவையை வழங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here