நோக்கியா நிறுவனம் மொபைல் மற்றும் டேப்ளெட் சந்தையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வாயிலாக சிறப்பான பங்களிப்பினை வழங்கும் நோக்கில் செயல் திட்டங்களை வகுத்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் என இரண்டிலும் 4 மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக நோக்கியா நிர்வாகி மைக் வாங் சீனாவின் தி பேப்பர் பத்திரிக்கை அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

எண்ணற்ற யூக தகவல்கள் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மிக சிறப்பான நுட்ப அம்சங்களுடன் பிரத்யேகமான பல நவீன வசதிகள் மற்றும் சிறப்பான செயல்திறனை கொண்டதாக விளங்கும்.

சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் அடிப்படையில் நோக்கியா ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் மற்றும் 5.5 இன்ச் திரை அமைப்புடன் ஆண்ட்ராய்டு நெளகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்களாக வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

படிக்க ; இதுதான் நோக்கியா ஆண்டாராய்டு மொபைல் ?

மைக் வாங் கூறுகையில் ஸ்மார்ட்போன் மட்டுமல்ல டேப்ளெட் மாடலும் வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் டெப்ளெட் சந்தையிலும் சிறப்பாக செயல்பட உள்ளது. நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களை ஹெச்எம்டி நிறுவனம் தயாரிக்கும்.

நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வந்தால் வாங்குவிங்களா ? உங்கள் கருத்து என்ன கமெண்ட்ஸ் பன்னுங்க…மக்களே…
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here