ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை கொண்டு மீண்டும் சந்தைக்கு திரும்ப உள்ள நோக்கியா நிறுவனம் இரு உயர்தர விலை கொண்ட நௌகட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இரு நோக்கியா மொபைல்களை அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்ற நிலையில் சில முக்கிய நுட்பவிபரங்களை கிஸ்மோசீனா இணையம் வெளியிட்டுள்ளது. வரவுள்ள புதிய நோக்கியா மொபைல்கள் இரண்டுமே மிகச்சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய நவீன கருவிகளாக விளங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
5.2 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என இரு விதமான QHD (2560×1440 pixels) டிஸ்பிளேவினை பெற்றிருக்கும். இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 820 அல்லது ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் பிராசஸர் பெற்று விளங்கும். மேலும் இதில் 22.3 மெகாபிகசல் பிரிமியம் கேமரா ஆப்ஷனை பெற்றிருக்கும்.
இரு மொபைல்களும் பிரிமியம் வடிவமைப்புடன் மெட்டாலிக் கொண்டு வடிவமைக்கப்பட்டு நோக்கியாவின் தரத்தை நிருபீக்கும். மேலும் IP68 தரச்சான்றிதழ் எனப்படும் தூசு மற்றும் தண்ணிரால் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படா வகையில் வடிவமைக்கப்படலாம். இரு ஸ்மார்ட்போன்களும் புதிய ஆண்ட்ராய்டு 7.0 அல்லது ஆண்ட்ராய்டு என் அதாவது ஆண்ட்ராய்டு நெளகட் இயங்குதளத்தில் செயல்படும்.
வருகின்ற 2017ஆம் நிதி வருடத்தின் முதல் காலண்டில் சர்வதேச அளவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை ரூ.30,000 இருக்கலாம்.
மேலும் படிக்க ; நோக்கியா பி1 மொபைல் இதுவா ?
Buy 50 % offers click here